பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 . . . . விளையாட்டுக்களின் விதிகள் -E>

3. Us (The Ball)

பந்து உருண்டை வடிவம் உடையது. தந்தம் போன்ற நெகிழ்ச்சி உள்ள பொருளான செல்லுலாய்டு (Celluloid) பொருளால் பந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணில் பளிச்சிடாத வெள்ளை நிறமுடையது. பந்தின் சுற்றளவு 4% அங்குலத்திலிருந்து 4% அங்குலம் வரை (11.13 சென்டிமீட்டர் முதல் 12.06. சென்டிமீட்டர் வரை) பந்தின் கனம் 2.5 கிராம் இருக்க வேண்டும். பந்தின் விட்டம் 38 மில்லி மீட்டர் ஆகும். o 4. Lu5iq tollstol- (The Racket)

பந்தடி மட்டையை எந்தப் பொருளிலும் செய்யலாம். அதன் வடிவம் அமைப்பு, கனம் எல்லாம் விரும்பிய வண்ணம் இருக்கலாம். ஆனால் வெண்மையாக இருக்கக் கூடாது. பளிச்சென இருக்காத வெளிறிய வண்ணத்தில் இருக்கலாம் என்பது பழைய விதி. இப்போது பலவிதமான பொருட்களால் ஆனதாக இருக்கிறது. மட்டையின் தலைப்பகுதி விட்டமானது 125 முதல் 165 மில்லி மீட்டர் (5 முதல் 6% அங்குலம்) வரை இருக்க வேண்டும். மட்டையின் விளிம்பு கனமானது 5.95 மில்லி மீட்டர் (3/16 முதல்5/8 அங்குலம்) இருக்க வேண்டும். மட்டையின் எடை 170 முதல் 200 கிராம் (6 முதல் 7 அவுன்சு) மட்டை மரத்தால் ஆனது (Wood). 5. வெற்றி எண்கள் (Points)

எந்த ஆட்டக்காரர் முதலில் 11 வெற்றி எண்களை

வெல்கிறாரோ, அவரே ஆட்டத்தில் வென்றவராவார். இரண்டு ஆட்டக்காரர்களும் 20-20 என்று சமநிலையில் இருந்தால், எந்த ஆட்டக்காரர் முதலில் 2வெற்றி எண்களை அதிகமாக எடுக்கிறாரோ, அவரே வென்றவராவார். -

2. விளக்கங்கள் (Definitions) 1. பந்தை மாறி மாறி அடித்து ஆடி அனுப்புவதே ஆட்டமாகும்.

(Rally). அப்படி இருவரும் ஆடுகிறபோது, பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். -

2. பந்து சர்வீஸ் போடுகிறபோது, வலையைத் தொடுவதை வலை பட்ட பந்து அல்லது மீண்டும் விளையாடப்படும் பந்து (Let) என்கிறோம்.