பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 271

8. சமநிலை - (Tie)

இரண்டு அணியினரும் 20 வெற்றி எண்கள் எடுத்திருக்கும் சமநிலை ஏற்படுகிறபோது, சர்வீஸ் போடுவதும் எடுத்தாடுவதும் முன்பு விளக்கிய விதிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். ஆனால், இந்தச்சமயத்தில், ஒவ்வொரு ஆட்டக்காரரும், ஒவ்வொரு &#656foT&T (Service for one point) (3Lim Gl, ஆட்டம் முடியும் வரை ஆட்டத்தைத் தொடர வேண்டும். -

முதலில் சர்வீஸ் போட்டு ஆட்டத்தைத் தொடங்கிய ஆட்டக்காரர் அல்லது அந்த அணி, அடுத்த முறை ஆட்டம் ஆரம்பிக்கிறபோது, சர்வீஸை எடுத்தாடுகிற ஆட்டக்காரராக அல்லது அணியாக மாற, ஆட்டம் தொடரும். அப்போது முதலில் பந்தை எடுத்தாடிய ஆட்டக்காரரே (Receiver) சர்வீஸ் போடுகிற வாய்ப்பைப் பெறுகிறார். -

ஒரு முறை ஆட்டம் (Game) முடிவுற்று, அடுத்த முறை ஆட்டம் தொடங்குகிறபோது, ஆடுகின்ற பக்கங்களை (Ends) ஆட்டக்காரர்கள்

மாறி வந்து நின்று ஆடவேண்டும்.

இரண்டு அணிகளும் அல்லது இரண்டு ஆட்டக்காரர்களும் 1-1. அல்லது 2-2 என்ற முறை ஆட்டங்களில் வென்று சமநிலையில் இருந்து, இறுதி ஆட்டத்தைத் (Last Game) தொடர்கிறபோது ஒரு ஆட்டக்காரர் அல்லது அணி, முதலில் 10 வெற்றி எண்களை எடுத்துவிட்டால், உடனே பக்கங்களை மாற்றிக் கொண்டு, பிறகு ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

இவ்வாறு பக்கங்களை மாற்றிக் கொள்ளாமல், ஆட்டம் தொடர்ந்தாலும், அந்தத் தவறை நடுவரானவர் தெரிந்து கொள்கிறபோது, உடனே பக்கங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். அப்போது எடுத்திருக்கிற அதே வெற்றி எண்கள் ஏற்றுக் கொள்ளப்படும். சர்வீஸ் போடுகிற, அதை எடுத்தாடுகிற அதே முறையும் அப்படியே பின்பற்றி ஆடப்படவேண்டும்.

யாராவது ஒரு ஆட்டக்காரர் முறை மாறி (வாய்ப்பை) (Out of turn) சர்வீஸ் போட்டாலும் அல்லது தவறான வாய்ப்பில் சர்வீஸை எடுத்தாடினாலும், அந்தத் தவறு தெரிந்தவுடனே, ஆட்டம் நிறுத்தப்படுகிறது.

அந்தத் தவறான வாய்ப்பு ஆட்டத்தின் போது ஏற்பட்ட தவறை உடனே நிவர்த்தி செய்துவிட்டு, அந்தத் தவறு ஏற்படுவதற்கு முன்