பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 - விளையாட்டுக்களின் விதிகள் =>

வெற்றி எண்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு, பிறகு பெறப்பட்ட வெற்றி எண்களையெல்லாம் lsill_G6u6ivT@id (Rockoned).

9.விரைவாட்ட விதிமுறைகள்

(Expedite System) -

ஒரு முறை ஆட்டம் 15 நிமிடங்களுக்குள் முடியாமல் போகிறபோது அல்லது இரண்டு ஆட்டக்காரர்களும் விரைவில் முடிக்குமாறு வேண்டுகோள் விடுகிறபோது, விரைவாக முடிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

2. ஆட்டத்தில், 15 நிமிட நேரம் முடிந்து விடுகிறபோது, பந்து விளையாடப்படாத நேரத்தில், ஆட்டத்தை நிறுத்துவதற்கு முன் எந்த ஆட்டக்காரர் பந்தை விளையாடிக் கொண்டிருந்தாரோ, அவருக்கு சர்வீஸ் போடுகிற வாய்ப்பு வழங்கப்படுகிறது. - -

3. அந்த சர்வீஸ்-க்குப் பிறகு, ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஒவ்வொரு சர்வீஸ் வாய்ப்புத்தான் தரப்படவேண்டும் (ForonePoint). இதில் உடனே வெற்றி எண் கிடைக்காதபோது, பந்தை எடுத்தாடியவர் (Receiver) 13 முறை தவறில்லாமல் பந்தைத் திருப்பி அனுப்பியிருந்தால் (13Good Returns) சர்வீஸ் போட்டவர் ஒரு வெற்றி எண்ணை இழப்பார். -

4. இந்த விரைவாட்ட முறையை அறிமுகப்படுத்திவிட்டால், அந்தப்போட்டி ஆட்டம் முடியும்வரை இந்த முறையையே பின்பற்றி ஆக வேண்டும். -

10. சில குறிப்புகள்

1. மட்டை

சர்வதேச விதிகளுக்குட்பட்ட பந்தாடும் மட்டையின் இருபுறமும், வெவ்வேறு வித்தியாசமான வண்ணத்தில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

மட்டையால் இரண்டு - பக்கத்தாலும் பந்தை அடித்து விளையாடாவிட்டாலும், அந்த இரு வண்ணம் கட்டாயம் இருக்க வேண்டும்.

2. உடை

அரைக்கால் சட்டை சட்டை அல்லது கைவைத்த பனியன், அல்லது கவுன் (Skirt), காலுறையுடன் கான்வாஸ் காலணி, பொதுவாக