பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 273

இந்த உடைகளைத்தான் அணிய வேண்டும். நடுவர் அனுமதித்தால், முழுக்கால் விளையாட்டுடையை (TrackSuit) அணிந்து கொண்டு ஆடலாம். -

கால் சட்டை, பனியன் எல்லாம் வெள்ளை அல்லாத வேறு வண்ணத்தில் இருக்கலாம். சட்டை காலர் மற்றும் அதன் அமைப்பானது வெள்ளையைத் தவிர்த்து, வெவ்வேறு மாறுபட்ட வண்ணத்தில் இருக்கலாம்.

இந்த விளையாட்டுடையில், தைக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தின் அளவு 16 சதுர சென்டி மீட்டருக்கு மேல் போகக் கூடாது.

முன்புற சட்டையில், அகில உலக மேசைப் பந்தாட்டக் கழகம் அனுமதித்திருக்கும் திட்டப்படி, அந்த எழுத்துக்கள் 64 சதுர சென்டி மீட்டர் அளவுக்கு மேல் போகக்கூடாது. . . . .

சட்டைக்குப் பின்புறம், அணிந்திருப்பவர் பெயரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கழகம் போன்ற இதனைப் பொறித்திருக்கலாம். ஆட்டக்காரர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அல்லது சட்டையில் தைக்கப்பட்ட வண்ண எழுத்துக்கள் எதிராளியின் பார்வையைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

விவாதத்திற்குரிய ஆடை, அதன் அமைப்பு பற்றி, நடுவரே சிறந்த முடிவை எடுப்பார். - - 3. ஆடுகள அமைப்பு

மேசையின் முன்புறம், பின்புறம், பக்கங்கள் எல்லாம் ஆட்டக்காரர்களுக்குப் போதிய அளவு இருப்பது போல, 14 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 4 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஆடுகள மேசைப் பரப்பைச் சுற்றி, 75 சென்டி மீட்டர் உயரத்திற்கு வண்ணத் துணியினால் (Dark) மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேசைப் பகுதிக்கு 4 மீட்டர் உயரத்திலிருந்து, குறைந்தது 400 வால்ட் பல்பின் வெளிச்சம் வருவது போலவும், அந்த வெளிச்சம் ஆடுவோருக்குக் கண்கள் கூசும்படியாக அமையாதவாறும் அமைத்திடவேண்டும்.

11. நடுவரின் பணிகள்

(Referee)

ஒவ்வொரு போட்டி ஆட்டத்திற்கும் ஒரு பொறுப்புள்ள நடுவர் நியமிக்கப்பட வேண்டும். அவரது பணிகள் பின் வருமாறு: