பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 விளையாட்டுக்களின் விதிகள் 👈


 1. இவரே ஆட்ட நடைமுறைகள் அனைத்திற்கும் பொறுப்பானவராகிறார்.
 2.ஆட்டக்காரர்களுக்குச் சீட்டெடுப்பின் மூலம் தெரிவு செய்ய உதவுதல்.
 3. ஆட்டநேரம் மற்றும் ஆட்டக்காரர்களுக்கு ஆடும் மேசையை ஒதுக்குதல்.
 4. அந்தந்தப் போட்டிக்குரிய ஆட்ட அதிகாரிகளை நியமித்தல்.
 5. ஆடப் பயன்படும் சாதனங்கள், ஆடைகள் பற்றிய வினாக்களுக்குரிய விதிப்படி விளக்கம் அளித்தல்.
 6. விளையாட்டுடைகள் (Track Suit) அணியலாமா என்பதை அனுமதித்தல்.
 7. ஆட்ட நேரத்தின்போது, ஆட்டக்காரர்கள் ஆடுகளப் பகுதியை விட்டு வெளியே சென்றுவர அனுமதித்தல்.
 8. ஆட்டக்காரர்களுக்கு முன் பயிற்சி செய்து (Practice) பழக அனுமதித்தல். 
10. தவறான நடத்தைக்கும், ஒழுங்கற்ற செயல்களுக்கும் தக்கவாறு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்.
 நடுவருக்கு உதவுவதற்காக துணை நடுவர் (Umpire) ஒருவரையும் நியமிக்கலாம். அவரது பணிகள் பின்வருமாறு:
 1. நடுவரின்

அனுமதியுடன்தான், துணை நடுவரை நியமிக்கலாம்.

 2. துணை நடுவர், மேசையில் உள்ள வலைக்கு நேராக, நடுவர் அமர்ந்திருப்பதற்கு நேர் எதிரில் அமர வேண்டும்.
 3. ஆட்டக்காரர்கள் பயிற்சி செய்கிற கால அளவை கண்காணிப்பது, ஆட்ட நேரத்தைக் குறித்து வைப்பது, ஓய்வு நேரத்தை வழங்குவதுடன் அவற்றை வரைமுறைப் படுத்துவது.
 4. விரைவான ஆட்டத்திற்கான விதிமுறையுடன் ஆடப்படுகிற போது, பந்தை எடுத்தாடும் ஆட்டக்காரர், பந்தை அடித்தாடும் எண்ணிக்கையை எண்ணிக் கணக்கிடுவது.
 5. ஆட்டநேரத்தின்போது, பந்தானது மேசையின் பக்கவாட்டில் படுகிறதா என கண்காணித்தல்.
 6. சர்வீஸ் சரியாக விதிமுறையுடன் போடப்படுகிறதா என்பதைக் கண்காணித்தல்.