பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 275

7. துணை நடுவர் நியமிக்கப்படாத பொழுது, விரைவாட்ட விதிமுறையில் அடித்தாடுவதை எண்ணுவதற்குத் தனியாக ஒரு அலுவலர் நியமிக்கப்படுவார். - -

8. துணை நடுவர் நியமிக்கப்படாத பொழுது, அத்தனை காரியங்களையும் நடுவரே கவனித்துக் கொள்வார்.

வெற்றி எண்கள்

1. நடுவர், குறிப்பிட்ட அந்தப் பந்து, ஆட்டத்தில் உள்ளதா அல்லது அது தவறியதா என்று தெரிந்தவுடன், உடனே வெற்றி எண்ணைக் கூற வேண்டும்.

2.அடுத்த சர்வீஸ்போடுவதற்கு முன்பாக, ஒருவர் எடுத்திருக்கும் மொத்த வெற்றி எண்களை, தெளிவாகக் கூற வேண்டும்.

3. ஒரு முறை ஆட்டம் முடிவுற்ற பின், வெற்றி பெற்ற ஆட்டக்காரர்பெயர், அவர் பெற்ற வெற்றி எண்கள், தோற்றவர் பெயர், அவர் பெற்ற வெற்றி எண்கள் அனைத்தையும் தெரிவிக்கவேண்டும்.

4. நடுவர் வெற்றி எண்களை அறிவிப்பதுடன், தனது முடிவுகளை சைகை மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

5. ஒரு வெற்றி எண் பெற்றவுடன், அதைப் பெற்ற ஆட்டக்காரருக்குத் தனது கையை தோள் அளவு உயர்த்தி, சுட்டிக்காட்டி வெற்றி எண் பெற்றதைக் குறித்துக் காட்டவேண்டும்.

6. எதிராட்டக்காரர் ஆடத் தயாராக இருக்கும்போதுதான், ஒருவரை சர்வீஸ் போட அனுமதிக்க வேண்டும். -

7. ஒவ்வொரு வெற்றி எண்ணுக்குப் பிறகும், வெற்றி எண்கள், வெளிப்படையாக, பார்வையாளர்களுக்கும் ஆட்டக்காரர்களுக்கும் தெரிவது போல, வெற்றி எண் பலகையில் குறித்துக் காட்ட வேண்டும்.

8. ஒரு ஆட்டக்காரர் போடுகிற சர்வீஸ் சந்தேகத்திற்குரிய முறையில் இருக்கிறது என்று நடுவர் கருதி, அவர் அதை உறுதி செய்து கொண்டு எச்சரிக்கை செய்ய விரும்பினால், உடனே ஒரு நீல அட்டையை (Blue Card) அவருக்கு எதிராக நீட்டி எச்சரிக்க வேண்டும்.

ஒரு போட்டி ஆட்டத்தின்போது, ஒரு நடுவர் ஒரு முறைதான் நீல அட்டை மூலம் எச்சரிக்கையை அளிக்கலாம்.