பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 விளையாட்டுக்களின் விதிகள்

1. ஆடுகளத்தின் அளவு (The Diamond)

- . மென்பந்தாட்ட ஆடுகள சதுரமானது 60 அடி நீளமுள்ள தளக்கோடுகளால் (Base Lines) அமைக்கப்பட்டிருக்கிறது.

பந்தெறிவோர் நின்றெறியும் இடமானது (Pitcher’s Box) பந்தடித்தாடும் தளத்திலிருந்து ஆண்கள் ஆட்டத்திற்கு 46 அடிதுாரம் என்றும், பெண்கள் ஆட்டம் என்றால் 40 அடி தூரம் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. - - -

ஆடுகள எல்லைக்குள்ளேதான், பந்தை அடித்தாடுவது - தடுத்தாடுவது போன்ற செயல்கள் நடைபெற வேண்டும். பந்தை அடித்தாடும் இடத்திலிருந்து (Home Plate) எல்லை முடிவு வரை எந்தவிதமான தடையும் இல்லாத பரந்த வெளியான 225 அடி தூரத்திற்குக் குறையாமல், ஆடுகளம் அமைந்திருக்க வேண்டும்.

எல்லைக்கும் வெளியே அடித்தாடும் இடத்திற்கும், பின்

தடுப்புக்கும் இடையே 25 அடி ஆரத்திற்கு எந்தவிதமான தடையும் இல்லாத பரந்த வெளியாகவும் இருக்க வேண்டும். -

இரு குழுக்களும் முன்னதாகவே ஏற்றுக்கொண்டு, ஆடுகள எல்லையை நிர்ணயித்துக் கொள்வதுடன்; பின்தடுப்புகள், வேலிகள், வாகனம் நிறுத்துமிடங்கள், பார்வையாளர்கள் இருக்கைகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டஎல்லைக்குள்ளே அமைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. ஆடுகளம் அமைத்தல் (Laying out Diamond)

முதலில் மைதானத்தில் பந்தடித்தாடும் தளத்தினைக் குறித்துக் கொள்ள வேண்டும். பந்தைப் பிடிப்பவர் நிற்கும் இடத்தின் அருகாமையில் உள்ள பந்தடித்தாடும் தள மூலையில், ஒரு ஆணியை அடித்து, அதில் நீண்ட கயிறு ஒன்றையும் கட்டிவிட வேண்டும்.

அந்த நீண்டக் கயிற்றில் 46 அடி (14 மீட்டர்), 60 அடி (18.3 மீட்டர்), 84 அடி 10 அங்குலம் (25.86 மீட்டர்), 120 அடி (36.6 மீட்டர்) என்று அளந்து, குறியிட்டு வைத்துவிட வேண்டும்.

பிறகு, நேர் பக்கமாக, கயிற்றை இழுத்துக் கொண்டு போய் 46 அடி தூரத்தைக் குறித்தால், அது பந்தெறிவோர் எறியும் இடமாகக்