பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 விளையாட்டுக்களின் விதிகள் *ES

1. பந்தெறிபவர் - Pitcher 2. பந்தைப் பிடிப்பவர் - Catcher 3. (p6 56m, smlumsnit - First Base Man 4. @76rl_mib 56m, smlumsmit – Second Base Man 5. மூன்றாம் தளக் காப்பாளர் - Third Base Man 6. முன்தடுப்பாளர் - Shot Stop 7. இடப்புறக் காப்பாளர் – Left Fielder 8. மையக் காப்பாளர் – Centre Fielder 9. வலப்புறக் காப்பாளர் - Right Fielder

ஆட்டத்தில் பங்குபெறும் ஆட்டக்காரர்களின் பெயர்களை ஆட்டத்திற்கு முன்கூட்டியே ஆட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

lom spp.ml. Lsmississir (Substitutes)

(1) மாற்றாட்டக்காரர்கள் யார் என்பதையும் குழுவின் தலைவரானவர் அதிகாரியிடம் முன்கூட்டியே குறித்துக் கொடுத்து விட வேண்டும். -

(2) மாற்றாட்டக்காரரை ஒரு ஆட்டக்காரருக்குப் பதிலாக சேர்க்க விரும்புகிற ஒரு குழுத்தலைவர், தன் விருப்பத்தை நடுவரிடம் கூற வேண்டும். அந்த மாற்றத்தை நடுவரானவர் எதிர்க்குழுத் தலைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் அறிவிப்பார். அனுமதி பெறாமல் ஆட்டக்காரர்களை மாற்றிக் கொள்வது கடுமையான தண்டனைக்குரியது. அதன்பிறகு அவர்கள் ஆட்டக் காரராகவோ அல்லது பயிற்சியாளராகவோ செயல்பட முடியாமல் ஆகிவிடும்.

(3) எந்த இடத்தில் யாருக்காகப் போய் ஒரு மாற்றாட்டக்காரர் நின்று ஆடுகின்றாரோ, அந்த இடத்தின் பெயரால்தான் அவர் அழைக்கப்படவேண்டும். அதாவது;

பந்தடித்தாடுபவருக்குப்பதிலாக வந்தால், பந்தடித்தாடுபவர் என்றும்; -

தடுத்தாடுபவருக்குப் பதிலாக வந்தால், பந்தடித்தாடுபவர் என்றும்; - -

தள ஓட்டக்காரருக்குப் பதிலாக வந்தால், தள ஓட்டக்காரர் என்றும்;

பந்தெறிபவருக்குப் பதிலாக வந்தால், பந்தெறிபவர் என்றும் அழைக்கப்பட்டு, ஆட்டத்தில் பங்கு பெறுகிறார்.