பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 விளையாட்டுக்களின் விதிகள் =

ஆட்டக்காரர் வெளியேறினாரோ அவரிடத்தில் பெயரைப் பதிந்து கொண்டு, அவருக்குரிய ஆடும் வரிசைமுறைக்கேற்பவே அவரும் ஆடவரவேண்டும். - -

- 7. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் (Inning) யார் முதலாவது பந்தடி ஆட்டக்காரராக வரவேண்டும் என்றால், முன்னைய முறை ஆட்டத்தில் பந்தடி வாய்ப்பு கிடைக்கப் பெற்றவருக்கு அடுத்த பெயருள்ளவரே வர வேண்டும். -

தண்டனை வரிசைமுறைதவறாக ஆடவந்துவிட்டால், அதை முறையீடு ஆட்டமாகக் (Appeal play) கொள்ளலாம்.

முறையீடு ஆட்டத்தில் வந்துவிட்டால், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற வகைகளைக் கீழே காணலாம்.

(அ) பந்தடி ஆட்டக்காரர் ஒருவர் வரிசை முறையில், தவறாகி வந்து ஆடும்போது கண்டுபிடிக்கப் பட்டால், அதாவது அவர் பந்தடிக்கின்ற தளத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டால், உடனே யார் அந்த வரிசை முறையில் வர வேண்டுமோ, அவரை உடனே அழைத்து வந்து ஆடச் செய்யலாம்.

அவ்வாறு ஆடத் தொடங்கும்போது, தவறாக ஆடியவர் அப்பொழுது எத்தனை பந்து (Ball) எத்தனை அடி (Strike) என்ற கணக்கில் இருந்தாரோ, அந்தக் கணக்கையே மேற்கொள்ளச் செய்து தொடர்ந்து ஆடலாம். அதே சமயத்தில், மற்ற ஆட்டக்காரர்கள் தளம் மாறிச் சென்றிருந்தாலும், ஓட்டம் எடுத்திருந்தாலும், அது சரியென்றே ஏற்றுக் கொள்ளப்படும்.

(ஆ) தவறான் வரிசை முறையில் ஒருவர் வந்து ஆடி, அவரது ஆடும் வாய்ப்பு (Turn) முடிந்து, இன்னொரு பந்தடி ஆட்டக்காரர் ஆட வந்து நின்று, அவருக்குப் பந்தெறிவதற்கு முன்னால் இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், தவறான வரிசையில் வந்து அடித்தாடியவர் ஆட்டமிழப்பார். (Out).

அப்பொழுது எடுத்த ஓட்டங்கள் எல்லாம் குறிப்பிலிருந்து நீக்கப்படும். நீளம் மாறி ஓடியவர்கள் தவறான பந்தடி ஆட்டக்காரர் வந்தபொழுது, இருந்த இடம் திரும்பவும், அதாவது முன்னர்தாங்கள் நின்று கொண்டிருந்த இடங்களுக்குச் சென்று நிற்க வேண்டும்.

பிறகு, சரியான வரிசையில் பெயர் உள்ள ஆட்டக்காரரே வந்து பந்தடித்தாட அழைக்கப்படுவார்.

தவறான வரிசையில் வந்து ஆடிய ஆட்டக்காரர் ஆட்டமிழக்கும் பொழுது, அவர் மூன்றாவதாக ஆட்டமிழந்தார் என்றால், சரியான