பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 விளையாட்டுக்களின் விதிகள்

தண்டனை: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் முன்னேறி ஓடிச்சென்று நின்று கொள்ளலாம். ஆனால் அதற்கிடையில் தொடப்பட்டால், ஆட்டமிழந்து விடவும் கூடும்.

(ஆ) ஒவ்வொரு முறையும், விதிகளுக்குப் புறம்பான அமைப்பில் எறியப்படுகின்ற பந்தாக பந்தடித்தாடும் தளம் நோக்கி வந்தால்.

தண்டனை: பந்து நிலைப்பந்தாகிறது. தள ஓட்டக்காரர்கள் ஒரு தளம் முன்னேறிச் சென்று நின்று கொள்ளலாம். அவர்கள் தொடப்பட்டாலும் ஆட்டம் இழக்க மாட்டார்கள் என்ற அளவில் அவர்கள் தங்களது தளங்களிலிருந்து முன்னேறிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 13. விதிகளுக்குரியவாறு வரும் பந்தும், அடித்தாடிய

பந்தும் -

(அ) விதிகளுக்குட்பட்டவாறு எறியப்பட்ட பந்தானது அடித்தாடப்பட்ட பிறகு, பந்தடித்தாடிய தளத்திற்கும் முதல் தளத்திற்கிடையிலும் அல்லது பந்தடித் தளத்திற்கும் மூன்றாம் தளத்திற்கு இடையிலும் உள்ள எல்லைக்குட்பட்ட தரையினைத் தொட்டாலும் அல்லது அங்கேயே நிலை கொண்டுவிட்டாலும் அது சரியான பந்தடியாகும்.

(ஆ) எல்லைக்குட்பட்ட சரியான தரையின் மேல் அல்லது மேலாகச் (On or Over) சென்று உள்ளாடும் ஆடுகளப் பகுதிக்குள் வந்துவிட்டாலும்,

(இ) முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளங்களைத் தொட்டிருந்தாலும்,

(ஈ) சரியான ஆடுகளத் தரையின் மேல் அல்லது மேலாகவோ, அங்கே நிற்கின்ற நடுவர் அல்லது ஆட்டக்காரரின் உடல் அல்லது உடையின் மேலோ பந்து பட்டிருந்தாலும்,

(உ) முதல் அல்லது மூன்றாம் தளத்திற்கு அப்பால் முதலில் பந்து விழுந்திருந்தாலும் அது சரியான பந்து என்றே ஏற்றுக் கொள்ளப்படும். - -

சரியான பந்து எது என்று கணக்கிட்டு நிர்ணயிக்கும்போது, வருகிற பந்தையும் அங்கிருக்கின்ற எல்லைக் கோட்டின் இணைப்பான தன்மையையும்தான் ஆராய வேண்டுமே தவிர, பந்தைப் பிடித்தாடுகின்ற ஆட்டக்காரர், அவர் பந்தைப்