பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 விளையாட்டுக்களின் விதிகள்

தண்டனை: (அ, ஆ - இரு பகுதிக்கும் உரியது) தவறான பகுதிக்குப் பந்து போனால், பந்து நிலைப்பந்தாகிறது. பந்து முறையோடு பிடிக்கப்பட்டு விட்டால், பந்தடிக்காரர் ஆட்ட மிழக்கிறார்.

2. பந்து பிடிக்கப்படாமற் போனால் ஏற்கனவே அவர் மேல் இரண்டு அடிகள் என்ற நிலை இல்லாமல் இருந்தால் அடி (Strike) என்பதாகக் கணக்கில் கொள்ளப்படும்.

3. பந்து பிடிக்கப்படாமல் இருந்தால், தள ஓட்டக்காரர்கள், ஓரிரு தளங்கள் ஓடிக் கொள்ளலாம். பந்து பிடிக்கப்பட்டுவிட்டால், உடனே தாங்கள் முன்னர் நின்று கொண்டிருந்த தளத்திற்கு ஓடி வந்துவிட வேண்டும். வர முயற்சிக்கும் பொழுது தொடப்பட்டு விட்டால், ஆட்டமிழந்து விடுவார்கள். - - 16. பந்து தவறாகப்பட்டு போதல் -

மட்டையில் பந்து தவறாகப்பட்டு போதல் (Foul Tip) என்பது தவறான பந்தாட்டமாகும். அதாவது, அந்தத் தவறான பந்து மட்டையில் பட்ட பிறகு, பந்தடித்தாடுபவரின் தலைக்கு மேல் GLT&mdo (Not Higher than the Head) GBGs Sliqu'il sugo (Catcher) சென்று அவர் பிடித்துவிட்டால், அது தவறான பந்தாகக் கருதப் படுகிறது. -

குறிப்பு: அவ்வாறு போகும் பந்து பிடிக்கப்பட்டால், அது அடி என்று கணக்கிடப்படும். பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஓட்டக்காரர்கள், தளங்களுக்கிடையில் தொடப்பட்டால், ஆட்டமிழந்து விடுவார்கள் என்ற விதியின்படி, ஒடிக் கொண்டிருக்கலாம். தொடப்பட்டால் ஆட்டமிழப்பார்கள். 17. பந்தைத் தொட்டாடும் பொழுது (Bunt)

பந்தைத் தொட்டாடுதல் என்பது மட்டையை வீசி அடிப்பது அல்ல. ஆனால் வேண்டுமென்றே வரும் பந்தின் மீது மட்டை படுமாறு வைத்துத் தொட்டாடி, மிக அருகிலேயே விழுமாறு செய்து விடுவதுதான்.

குறிப்பு:இவ்வாறு ஆடும்போது பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். பந்தடி ஆட்டக்காரர் தள ஓட்டக்காரராக மாறுகின்றார். வேறு தளங்களில் உள்ள தள ஓட்டக்காரர்கள் மற்ற தளங்களுக்கு மாறி ஓடலாம். ஆனால் தளங்களுக்கு இடையில் அவர்கள் தொடப்பட்டால் ஆட்டமிழப்பார்கள்.

2. பந்தைத் தொட்டாடும்போது மூன்றாவது அடி தவறானதாகிவிட்டால் (Foul) பந்தடிக்காரர் ஆட்டமிழக்கிறார். தள ஒட்டக்காரர்கள் தளத்திற்காக முன்னேறிச் செல்ல முடியாது.