பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 295

18. கீழ்க்காணும் சூழ்நிலைகளில் ஒரு பந்தடி ஆட்டக்காரர்

ஆட்டமிழந்து விடுகிறார் (Batter is out)

1. மூன்றாவது அடியில் பந்தைப் பிடிப்பவர் பிடித்து விட்டால்; 2. ஏற்கனவே இரண்டுக்கும் குறைவாக ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்கும்போது, பந்தடி ஆட்டக்காரர் மூன்றாவது அடி முடிந்து முதல் தளம் நோக்கி ஓட வேண்டிய சூழ்நிலையில், எல்லா தளங்களிலும் ஒட்டக்காரர்கள் நின்று கொண்டிருந்தால்;

3. மூன்றாவது அடி அடிக்கும்போது, அது அடியாகக் கருதப்படும்பொழுது அடி தவறிப் போய் பந்தானது, பந்தடிக்காரர் உடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தொட்டுவிட்டால்;

4. இரண்டாவது அடி முடிந்து, பந்தைத் தொட்டாட முயலும்போது அது தவறாகிவிட்டால்;

5. தவறாக அடித்தாடிய பந்து (Foul Ball) விதிகளுக்குட்பட்ட முறையில் பிடிக்கப்பட்டால்;

6. ஆடுகள உட்பகுதி (in Field) என்பது ஆடுகள சதுரத்தைக் குறிக்கும் எல்லைக் கோடுகளுக்குட்பட்ட பகுதியாகும்.

உட்புறப் பகுதியில் உயர்ந்து வரும் பந்து (In Field Fly) என்பது சரியான முறையில் மட்டையால் பந்து அடிக்கப்பட்டு (தொட்டாடியதால் அல்லது கோட்டோரமாக வருவது போல் வருகிற பந்து அல்ல) வருவதை பந்தைத் தடுத்தாடுபவர்களால் (Fielder) எளிதாகப் பிடிக்கும் வண்ணம் அமைவதை அல்லது அவர்களால் எளிதாகப் பிடிக்க முடியும் என்று நடுவர் கருதினால், அதுவே உட்புறப் பகுதியில் உயர்ந்து வரும் பந்து என்று அழைக்கப்படும்.

மேலே விளக்கப் பெற்றிருப்பது போல், பந்தடி ஆட்டக்காரர் பந்தை அடித்திருக்கும்போது, தள ஓட்டக்காரர்கள் முதல் இரண்டு தளங்களில் அல்லது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற மூன்று தளங்களிலும் இருந்தால், அப்பொழுது இரண்டு ஆட்டக் காரர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில், ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருந்தால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுகிறார்.

9. பந்தெறியும் விதிமுறைகள் (Pitching Regulation)

1. பந்தெறியத் தொடங்குவதற்கு முன்

1. பந்தெறிய வருகிற ஆட்டக்காரர், முதலில் பந்தெறி பவருக்குரிய கட்டத்திற்குள் வந்து, இரண்டு கால்களும் தரையில் நன்றாகப் பதிந்திருக்குமாறு நின்று கொள்ள வேண்டும்.