பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 297

1. பந்தெறிபவரை நோக்கி எறியப்படுகின்ற பந்தானது கையை விட்டு நீங்கிப் போகும் பொழுது - எறிந்த கையும் மணிக்கட்டுப் பகுதியும் முன்புறமாக சிறிது நேரம் உடலுக்கு நேர்க்கோட்டளவு அமைந்திருப்பது போல சென்றிருக்க வேண்டும். -

2. எறியும் கைப்பகுதி யானது இடுப்பளவுக்குக் கீழாகவே இருக்க வேண்டும். மணிக்கட்டானது முழங்கைப் பகுதிக்கு மேல் வரக்கூடாது. இந்த அமைப்புடன்தான் பந்தை எறிந்து வரவேண்டும்.

3. பந்தடித்தாடுபவரை நோக்கி ஒரு காலடியை எடுத்து (Step)

வைத்து எறிந்ததுமே, பந்தெறியானது முடிந்துவிடுகிறது. -

4. பந்தெறி நிகழ்த்தும்போது பந்தைப்பிடித்தாடுபவர் (Catcher) அவரது பந்தைப் பிடித்தாடும் பகுதிக்குள்ளே கட்டாயம் இருக்க வேண்டும். - - -

5. பந்தைப் பிடிப்பவர், ஒவ்வொரு முறை எறிந்தப் பந்தைப் பிடித்தவுடன், பந்தெறிபவரிடம் நேராகவே எறிந்து தரவேண்டும்.

பந்தடித்தாடுபவர் பந்தை அடித்தாடினாலோ, உடனே பந்தை எறிந்து தர வேண்டியது அவசியமில்லை. -

எறிபவரிடமிருந்து பந்து தனக்குக் கிடைத்ததும் பந்தைப் பிடித்தாடுபவர் நேராக உடனே பந்தெறிபவருக்கு அனுப்பிவிட வேண்டும். பந்தைப்பெற்று பந்தெறிபவர், அடுத்த20 விநாடிகளுக்கு அடுத்த பந்தெறியை ஆரம்பித்துவிடவேண்டும். (ஒட்டக்காரர்கள் தளங்களில் இருக்கும்பொழுது, இந்த விதிமுறை பின்பற்றப்படத் தேவையில்லை.)

4. பந்தெறியும் முறை *

1. பந்தடித்தாடுபவரை நோக்கி உடனே பந்தை எறிந்து விட வேண்டும். அவர் வேறு எந்தவித அசைவுகளையும் (Motion) செய்யக் கூடாது. - -

2. பந்தெறியத் தொடங்கியவுடன், பந்துள்ள கையை முன்பின் என்று பலமுறை (RockerAction) கொண்டுசெல்லக்கூடாது. இரண்டு கைகளிலும் முதலில் பந்தை வைத்திருந்துவிட்டு, பந்திலிருந்து ஒரு கையை எடுத்ததும், பந்தை பின்புறமாகக் கொண்டு சென்று, பிறகு முன்புறமாகக் கொண்டு வந்து, முன்போலவே உடலுக்கு முன்புறம் பந்தை இருகைகளிலும் பிடித்துக் கொண்டு நிற்பது, இந்த முறை கூடாது. -

3. பந்தை எறிவதற்காகப் பின்புறம் கையை கொண்டு

சென்றுவிட்ட பிறகு, இடையிலே கை வேகத்தை நிறுத்தி