பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விளையாட்டுக்களின் விதிகள்

வைத்துத் தாக்கும் குழுவில் உள்ள ஒருவர் உதைக்க, ஆட்டம் தொடங்கும். முனை உதை எடுக்கும்பொழுது, முனைக் கொடிக் கம்பத்தை அகற்றக்கூடாது. முனை உதை எடுக்கும் குழுவுக்கு எதிர்க்குழுவினர், பந்தை உதைக்கப்பட்டு அதன் சுற்றளவு தூரம் உருளும் வரை, 10 கெசத் தூரத்திற்கு அப்பாலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர்கள் பந்தைத் தொட்டு விளையாடுவதற்கு முன்னரே, முனை உதையை உதைத்தவர் மீண்டும் ஆடக்கூடாது.

முனை உதையால் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியும்.

தண்டனை:இந்த விதியை மீறி நடந்தால், தவறு செய்தவரின் எதிர்க்குழுவினருக்கு தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து மறைமுகத் தனியுதை செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். 5. தவறுகளும் பண்பற்ற நடத்தையும் தெரியாமல் செய்வதைத் (Unintentional) தவறு என்றும் Geusist(B Gludtp Glstingusog, (Intentional) (5pplb (Offence)

என்றும் கொள்வோம். 1. Ligil (501D15.56m (Ten offences)

1) எதிராளியை உதைத்தல், உதைக்க முயலுதல். 2) எதிராளியின் காலை இடறி விடுதல் அதாவது கால்களை உபயோகித்து அவரைத்தட்டிக் கீழே விழச்செய்தல், அல்லது செய்ய முயலுதல், அல்லது முன்னாலோ அல்லது பின்னாலோ சென்று அவரைத் தடுத்து நிறுத்தல் தவறு.

3) எதிராளி மேல் ஏறிக் குதித்தல் தவறு. 4) முரட்டுத்தனமாக அல்லது ஊறு விளைவிக்கக் கூடிய முறையில் எதிராளியைத் தாக்குதல் தவறு.

5) எதிராளி தடுக்காத பொழுதே அவர் பின்புறம் சென்று மோதுதல் தவறு.

6) எதிராளியை அடித்தல், அடிக்க முயலுதல் தவறு. 7) கையால் அல்லது கையில் ஏதாவது ஒரு பாகத்தால் எதிராளியைக் கட்டிப் பிடித்தல் தவறு.

8) கையால் அல்லது கையில் ஏதாவது ஒரு பாகத்தால் வேகமாகத் தள்ளுதல் தவறு.