பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 299

தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு மாறிச் செல்ல அதாவது தொடப்பட்டு ஆட்டமிழக்காத வண்ணம், மாறிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விதிவிலக்கு: தவறாகவே பந்தெறிபவர் பந்தடித்தாடுபவரை நோக்கி எறியும் பொழுது, அதை பந்தடித்தாடுபவர் அடித்துவிட்டு முதல் தளம் நோக்கிப் பாதுகாப்பாக ஓடியும், மற்ற தள ஓட்டக் காரர்களும் ஒவ்வொரு தளத்திற்கும் ஓடிவிட்டாலும், ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். முறையிலாபந்தெறி என்று அதனை நடுவர் குறிப்பிடமாட்டார்.

குறிப்பு: தாமதமான நிலைப்பந்து என்பதை, நடுவரானவர் தனது இடது கையை சரிமட்டமாக நீட்டி சைகை மூலம் காட்டிவிட வேண்டும். - 6. முறையான பந்தெறி இல்லை என்று அறிவிக்கும்.

(Sofileoso (No Pitch) -

1. ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும்போது (Suspension) பந்தெறிபவர் பந்தெறிந்தால்;

2. பந்தடித்தாடுபவர்பந்தடித்தாடத்தயாராக இல்லாதநிலையில் பந்தெறிந்தால், அல்லது முதலில் எறிந்த பந்தை அடித்து அல்லது அடிக்க முயன்று அதனால் சமநிலை இழந்தவாறு நின்று கொண்டிருக்கும்போது எறிந்தால்;

3. சீக்கிரமாக தளத்தை விட்டு ஓடினார் என்பதற்காகத் தள ஒட்டக்காரர் வெளியேற்றப்படும் பொழுது (Out), பந்தெறிந்தால்;

4. தவறான பந்து (Foul Ball) என்று நடுவர் அறிவித்து, அப்பொழுது பந்து நிலைப்பந்தாகி இருக்கும்பொழுது, தள ஒட்டக்காரர் தன்னுடைய தளத்தை மீண்டும் வந்து அடைந்து நிற்பதற்குள் பந்தெறிந்தால்;

- அது முறையான பந்தெறி இல்லை என்று நடுவர் அறிவித்துவிடுவார். - -

தண்டனை: இதுபோன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், பந்து நிலைப்பந்தாகிவிடுகிறது. முறையில்லா பந்தெறியைத் தொடர்ந்து நடக்கின்ற மற்ற செயல்கள் எல்லாம் நிராகரிக்கப்படும்.