பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 305

இருந்து கட்டாயமாக ஒடியே ஆகவேண்டும். ஏனென்றால், பந்தடித்தாடி மறுதளம் நோக்கியபடி ஓடி வருகிறவருக்கு முதல் தளத்தில் இடம் தந்தே ஆக வேண்டும். அவ்வாறு இடம் தராத தள ஒட்டக்காரர், கட்டாயமாக ஆட்டம் இழந்துவிடுவார் (Force-out).

2. முதல் தளத்தை சரியாக மிதிக்காமல் ஓடி இரண்டாம் தளத்திற்குச் சென்று, அங்கே இருந்து தொடர்ந்து ஆட முயலும்போதும் அவர் ஆட்டமிழக்கிறார். . . 5. உரிமையுடன் தளம் நோக்கி முன்னேறுதல்

தள ஒட்டக்காரர்கள் தொடப்பட்டாலும் இழக்க மாட்டார்கள் என்ற உரிமையுடன், தளம் நோக்கி முன்னேறிச்செல்ல கீழ்க்காணும் விதிமுறைகள் வழிகாட்டுகின்றன.

1. பந்துகள் (Balls) என்ற அடிப்படையில் 4 பந்து ஆனதால், நடுவர் அறிவித்த பிறகு, முதல் தளம் நோக்கிப்பந்தடி ஆட்டக்காரர் வருகின்ற நேரத்தில், அந்தத் தளத்தை விட்டுவிட்டு, மற்ற தள ஒட்டக்காரர் மாறிச் சென்றுதான் ஆகவேண்டும்.

குறிப்பு: அப்பொழுது, பந்து தடுக்கப்படாவிடில், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தள ஓட்டக்காரர் ஒரு தளம் செல்லலாம். பந்து ஆட்டத்தில் இருக்கும் பொழுது தொடப்பட்டால், ஆட்டமிழக்கலாம் என்ற விதி இருப்பதால், அதற்குட்பட்ட்ால் மேலும் தளம் நோக்கி முன்னேறியும் விடலாம். --

2. பந்தைத் தடுத்தாட முயலும் பொழுது அல்லது பந்தைக் கையில் வைத்துக்கொண்டு தள ஓட்டக்காரரைத் தொட ஒரு தடுத்தாடுபவர் (Fielder) முயலலாம். அவ்வாறு இல்லாத நேரத்தில், தளம் நோக்கி ஓடுகின்ற ஒட்டக்காரரை, தளத்தைத் தொடவிடாமல் தடுத்தாடுபவர் தடுத்தால் (Obstruct). -

தண்டனை: அவ்வாறு தடுத்திடாவிட்டால், தள ஓட்டக் காரர்கள் ஒரு தளம் ஓடியிருப்பார்கள் என்று நடுவர் கருதினால், எல்லா தள ஓட்டக்காரர்களையும் ஒரு தளம் நோக்கி முன்னேறிச் செல்ல ஆணையிடுவார். அப்பொழுது பந்து நிலைப்பந்தாகிறது.

3. முரட்டுத்தனமாக எறிந்த பந்தானது, அல்லது பிடிக்கப் படாமல் கடந்து போகின்ற பந்தானது, பின் தடுப்புக்கு (Back Stop) மேலேயோ அல்லது கீழேயோ அல்லது உள்ளேயோ சென்றால் அல்லது பின்தடுப்பில் தேங்கி நின்றால்,

4. பந்தடி ஆட்டக்காரருக்கு ஒரு தளம் செல்லலாம் என்ற அனுமதி கிடைத்த பிறகு, (முதல் தளத்தில்) நிற்பவர் கட்டாயமாக