பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 விளையாட்டுக்களின் விதிகள் -E>

அந்தத் தளத்தை விட்டுக் கொடுத்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும். - -

5. பந்தெறிபவர் (Pitcher);suprem முறையில் பந்தெறிந்தால்.

6. பந்தெறிபவர் எறிந்த பந்தானது பின் தடுப்புக்கு மேலேயோ, உள்ளேயோ அல்லது உட்புறமாகவோ சென்றிருந்தால்.

- குறிப்பு: பந்து நிலைப்பந்தாகிறது. தள ஓட்டக்காரர்கள் தளம் - நோக்கி முன்னேறிச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

7. பந்தைத் தடுத்தாடுபவர், பந்தடித்தாடுபவர் அடித்த பந்தை அல்லது பிறர் எறிந்த பந்தைத் தடுத்தாடவோ அல்லது பிடித்தாடவோ முயலும்போது, தன்னுடைய தொப்பி அல்லது கையுறை அல்லது தனது சீருடையின் ஏதாவது ஒரு பகுதியைப் பயன்படுத்தினால்.

தண்டனை: பந்தடித்தாடுபவர் அடித்த பந்தை தடுத்தாடுபவர் அவ்வாறு நிறுத்தினால், மூன்று தளங்கள் செல்ல தள ஓட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எறிந்த பந்தாக (Throw Ball) இருந்தால், அதற்கு இரண்டுதளங்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் தளங்கள் ஓடிட வேண்டுமென்று விரும்பினால், அப்பொழுது தொடப்பட்டால் ஆட்டமிழக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் ஓடிக் கொள்ளலாம்.

சரியான முறையில் அடிக்கப்பட்ட பந்தைத் தவறான முறையில் தடுத்து அல்லது தொட்டாடிய தடுத்தாடுபவரை நடுவர் கண்டு. கொண்டால், அவ்வாறு அவர் தடுத்தாடியிருக்காவிட்டால், அந்தப் பந்தானது எல்லை வரை சென்றிருக்கும் என்று அவர் உறுதியாக நினைத்தால், அந்த ஒட்டக்காரர்.ஒரு ஓட்டம் (Run) எடுத்துவிட(Home. run) அனுமதியளித்துவிடலாம்.

8. ப்ந்து விளையாட்டிலிருக்கும் பொழுது, முதல் மூன்றாம் அல்லது அடித்தாடும் தளத்தைத் தாண்டி அதிகப்படியாக வீசியெறிந்து, அப்பந்தானது தவறான ஆடுகளத்தில் தடுக்கப் பட்டால் அல்லது நிறுத்தப்பட்டால். -

தண்டனை பந்துநிலைப்பந்தாகிறது. எந்தத்தள ஓட்டக்காரர் மீது விளையாடப்பட்டதோ அவர் தான் ஓடிய தளத்திற்கு மேலே இன்னும் ஒரு தளம் கூடசெல்லலாம். மற்ற தள ஓட்டக்காரர்களுக்கும் அதே அளவு தளங்கள் முன்னேற அனுமதிக்கப்படுவார்கள்.

6. தள ஓட்டக்காரரின் முன்னேற்றம் நிறுத்தப்படுதல்

1. சரியாக அடிக்கப்பட்டு பறந்து போகும் பந்தானது நேராக வேலியையோ அல்லது பார்வையாளர்களின் இடத்தையோதாண்டிப்