பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 309

2. பந்து விளையாட்டிலிருக்கும்பொழுது தளத்தினை மிதிக்காத அல்லது சேராத தள ஓட்டக்காரர், தடுத்தாடுபவரால் பந்தால் தொடப்பட்டால்; -

3. கண்டிப்பாக ஓடி சேர வேண்டிய தளத்தில் தள ஓட்டக்காரர் வருவதற்குமுன், தடுத்தாடுபவர் பந்தை அத்தளத்தில் வைத்துக் கொண்டிருந்தால், -

4. ஆட்டம்தற்காலிகமாக நிறுத்தப்பட்டுத்துவங்கப்பட்டவுடன், தள ஓட்டக்காரர் தன் தளத்திற்குத் திரும்பாவிட்டால், ஆட்டத்தைத் துவங்கியவுடன் நடுவரால் வெளியேற்றப்படுவார். -

5. ஒரு தள ஓட்டக்காரர் தனக்கு முன்னே அவர் நிற்கும் நின்றாடுகின்ற முன் தள ஓட்டக்காரர் வெளியேறும் முன்னர், தளத்தைத் தாண்டி ஓடினால்,

தண்டனை: பந்து ஆட்டத்திலிருக்கும், தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். . . . . . . .

6. அடிப்பட்டுப் பறந்து ப்ோகும் பந்தைப் பிடிக்கும் முன்பே தளத்தை விட்டு வெளியேறிய தள ஓட்டக்காரர் ஒருவர், தன் தளத்திற்குத் திரும்பும் முன்னரே தடுத்தாடுபவர் பந்தைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது தளத்தைத் தொட்டாலோ,

7. தள ஓட்டக்காரர் சரியாக தளத்தைத் தொடாமலோ அல்லது தளங்களுக்கிடையிலிருக்கும் போதோ தடுத்தாடுபவர் பந்தால் அத்தளத்தைத் தொட்டாலும், தள ஓட்டக்காரரைத் தொட்டாலும்;

8. தள ஓட்டக்காரர் முதல் தளத்தைத் தாண்டி ஓடிய பின் திரும்பவும் முதல் தளத்திற்கு வராமல் இரண்டாம் தளத்திற்குச் சென்று திரும்பும்போது அல்லது சரியான விதிப்படிதொடப்பட்டால்;

தண்டனை: (அ) இது ஒரு முறையீடு ஆட்டமாகும் (Appeal Play). ஆகவே, தளத்திற்கு அப்பால் தடுத்தாடும் குழுவைச் சேர்ந்தவர்கள் அடுத்தப் பந்தை எறியும் முன்தங்கள் முறையீட்டைக் கூறி அவரை வெளியேற்றுமாறுசெய்ய வேண்டும்.

(ஆ) பந்து ஆட்டத்திதிலிருக்கும். தளஒட்டக்கந்காரர்வெளியேற்றப்

படுவார். - - - -- to - - - -

(இ) வெளியேற்றப்பட்டவ்ர் கண்டிப்பான முறையிலோ அல்லது அம்முறை ஆட்டத்திலோ (Inning) மூன்றாவதாக வெளியேற்றப் பட்டவராகவோ (Third out) இல்லாவிடில், எல்லா ஓட்டங்களும் கணக்கிடப்படும்.