பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசி

GP - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 311

18. தள ஓட்டக்காரர் தளத்துடன் இணைந்து நிற்க வேண்டும். பந்து முறையாக எறிபவரின் கையை விட்டுப் போகுமுன் தளத்தைவிட்டு வெளியேறினால்,அவர் வெளியேற்றப்படுவார்(Out). பந்து எறிந்த பின்போ அல்லது அடிக்க முயற்சித்த பின்போ தள ஒட்டக்காரர்தளத்திற்கு வெளியே சென்றிருந்தால், திரும்பவும் அவர். தளத்திற்கு வந்தடைய, எறிபவர் நேரம் கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர் திரும்பவும் தளத்தை அடைந்தபின், எறிபவரின் கையைவிட்டு பந்து அகலுமுன்னர் தளத்தைவிட்டு வெளியே செல்லுதல் கூடாது. அதற்குப்பின், தளத்தை விட்டு வெளியேறி னால், பந்து எறிபவர் கையிலிருந்தாலும் கூட, தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். ‘

தண்டனை: பந்து நிலைப்பந்தாகும். பந்து எறிவது தடை செய்யப்பட்டு, தள ஓட்டக்காரர் வெளியேற்றப்படுவார். 10. தள ஓட்டக்காரர் ஆட்டமிழக்காத சூழ்நிலை

1.தளஒட்டக்காரர் பந்தைத்தடுத்தாடுபவரின் பின்னே பந்தைத் தடுக்கும்போது, அவருக்குக் குறுக்கீடு இல்லாமலிருக்கும் பொருட்டுத் தன் பாதையில் நகர்ந்து ஓடினால்,

2.தடுத்தாடுபவர் கையில் பந்தில்லாமல் நிற்கும்போது, தள ஒட்டக்காரர் ஓடும் பாதையில், ஒடும் பாதையைவிட்டு அப்பால்

- - -- | -

ஓடினால், . *”

3.தடுத்தாடுபவர்கள் பந்தைத்தடுக்கும் முயற்சியில் ஒருவருக்கு மேலே பலராக ஈடுபட்டிருக்கும்போது மோதிக் கொண்டு தடுத்தாடுபவர், பந்தைத் தடுக்கும் சாதகமான நிலையில் இல்லையென்று நடுவர் நினைத்தால்,

4. ஆடுகளத்தின் உள்ளிருந்து ஆடும் உள்ளாட்டக்காரரைத் தாண்டிவந்து பந்து தள ஓட்டக்காரரின் மேல்பட்டுப்போகும்போது, வேறுயாரும் அதைத்தடுக்க முடியாது என்று நடுவர் தீர்மானித்தால்;

5. தடுத்தாடுபவர் கையில் சரியாகப் பிடிக்காத பந்தினால் தள - ஒட்டக்காரரைத் தொட்டால்;

6. தடுத்தாடும் குழுவைச் சார்ந்தவர்கள் அடுத்த பந்து எறியும் முறைக்கு முன், முறையிட்டு நடுவரின் முடிவைக் கோராததால்,

7. தள ஓட்டக்காரர் முதல்தளத்தைத் தொட்டுத் தாண்டி ஓடிவிட்டு பின் மீண்டும் முதல் தளத்திற்கே திரும்பி வரும்போது; 8. தள ஓட்டக்காரர் தளத்திற்குத் திரும்ப வரும்வரை நேரம் கொடுக்காமல் அடுத்த பந்தை எறிந்தால், தள ஓட்டக்காரர்