பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 315

7. வீசிய பந்து தடுத்தாடுபவரின் பின்னால் சென்று சரியான ஆடுகளத்தின் உள்ளே தங்கியிருக்கும்போது: -

8. சரியான பந்து தடுத்தாடுபவரின் மேல் பட்டோ அல்லது கடந்தோ சென்று நடுவரின் மீதோ அல்லது தள ஓட்டக்காரரின் மேல்

9. சரியான பந்து தவறான எல்லையில் நிற்கும் நடுவரின்மேல் படுகின்ற பொழுது; - . -

10. தள ஓட்டக்காரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தளத்திற்குச்சென்று அடைந்து, தடுத்தாடுபவர் தவறான முறையில் அடித்த அல்லது வீசிய பந்தைப் பிடிக்கும் பொழுது;

11. தள ஓட்டக்காரர் முன்னோட்டக்காரரைத் தாண்டி ஓடியதற்காக வெளியேற்றப்படுகிறபொழுது,

12. சரியான பந்து முறையாக அடிக்கப்படுகிற பொழுது: 13. பந்து விளையாட்டிலிருக்கும் போது தள ஓட்டக்காரர் திரும்பவும் பின்னோக்கி ஓடும் கட்டாய நிலையேற்கிற பொழுது,

14. ஒரு தள ஓட்டக்காரர் தன் தளத்தைத் தொட்டு வெளியேற்றப்படுமுன் சென்று தொடப்படுகிறபொழுது:

15. தள ஓட்டக்காரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் போது தளங்கள் இடத்தை விட்டு நகர்த்தப்படுகிறபோது:

16. தள ஒட்டக்காரர்செல்லும் பாதையிலிருந்து மூன்று அடிக்கு அப்பால்தடுத்தாடுபவர் வந்து பந்தால் தொடாமலிருக்கும்பொருட்டு நகர்ந்து ஓடும் பொழுது

17. தள ஓட்டக்காரர் தொட்டோ அல்லது கட்டாயமாகவோ வெளியேற்றப்படுகிற பொழுது: . = -

18. விளையாட்டானது சற்று நேரம் தடை செய்யப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது, தள ஓட்டக்காரர் தன் தளத்தைத் தொடாமல் சென்றதற்காக வெளியேற்றப்பட்டபோது,

19. முறையீட்டு விளையாட்டு விதியை அனுசரித்து விளையாடிய பொழுது; o

எல்லா சூழ்நிலைகளிலும், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். . . . . - -