பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விளையாட்டுக்களின் விதிகள் >

தவறாகும். மேற்கூறியத் தவறுகளுக்குத் தண்டனை, மறைமுகைத் தனியுதையேயாகும். தவறு (Foul) நடந்த இடத்தில்தான் தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.

3. கீழே காணும் குற்றங்களுக்கு, உரியோர் நடுவரால்

எச்சரிக்கப்படுவார்.

(அ) ஆட்டம் தொடங்கிய பிறகு நடுவரின் அனுமதியின்றி இடையில் வந்து சேர்ந்து கொள்வதும்; ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆடுகளத்திற்குள் திரும்பி வருவதும்; அல்லது ஆட்டம் நிற்பதற்காக காத்திராமல் உள்ளே நுழைவதும் போன்ற செய்கையில் ஈடுபடும் ஒரு ஆட்டக்காரர் எச்சரிக்கப்படுவார். எச்சரிக்கையை நிறைவேற்ற ஆட்டத்தை நிறுத்தி, அதன் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க, தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து எதிர்க்குழுவினர்க்கு மறைமுகத் தனியுதை வாய்ப்பைத் தந்து ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். குற்றம் கடுமையானதாக இருந்தால், அதற்கேற்ற விதிகளின்படி அவர் தண்டிக்கப்படுவார்.

(ஆ) ஆட்ட விதிகளைப் பிடிவாத குணத்துடன் தொடர்ந்து மீறுதல்.

(இ) நடுவர் அளித்த முடிவைக் குறித்து வார்த்தையாலோ அல்லது முகபாவ நடிப்பாலோ ஏளனம் செய்தல்:

(ஈ) மனிதப் பண்பாடற்ற முறையில் செயலாற்றுதல்; (உ) எதிராளி, நடுவர் இன்னும் மற்றவர்கள் மேல் துப்புதல் போன்ற மனிதப் பண்பாடற்ற முறைகளில் செயலாற்றுதல்:

மேற்கூறிய குற்றங்களுக்கு உரியோர் எச்சரிக்கப்படுவார். கடைசியாகக் கூறிய 3 குற்றங்களுக்கும் எச்சரிக்கை பெறுவதோடு அல்லாமல், தவறு நிகழ்ந்த இடத்தில் வைத்து மறைமுகத் தனியுதையும் தண்டனையாகக் கொடுக்கப்படும். 4. வெளியேற்றப்பட வேண்டிய ஆட்டக்காரர் (அ) மூர்க்கத்தனமான நடத்தையுள்ளவர்; (ஆ) வெறுக்கத் தகுந்த ஆபாசமான வார்த்தைகளை உபயோகிப்பவர், அல்லது நடுவரின் கருத்துப்படி அபாயமான தவறான ஆட்டத்தைப் பின்பற்றுபவர்;

(இ) ஒருமுறை எச்சரிக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே குற்றத்தைப் பிடிவாதமாகச் செய்பவர்.

மூர்க்கத்தனமாக ஆடும் ஆட்டக்காரருக்கு முதல் முறை மஞ்சள் அட்டை (Yellow card) காட்டி, நடுவர் எச்சரிப்பார். மீண்டும் அவர்