பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 விளையாட்டுக்களின் விதிகள் ..

12. மாற்று ஆட்டக்காரர்கள்; 5 பேர் ... “ 13. மாற்று ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தில் தவறாக நுழைந்தால்

பெறும் தண்டனை:2 நிமிடம் இடைநீக்கம். 14 ஆண்களுக்கான கையெறிப் பந்தின் எடை:425-475 கிராம். 15. பெண்களுக்கான கைறிெப் பந்தின் எடை: 325-400 கிராம். 16. ஆண்களுக்கான கையெறிப்பந்தின் சுற்றளவு:58-60 சென்டி

17. பெண்களுக்கான கையெறிப் பந்தின் சுற்றளவு:54-56 சென்டி - மீட்டர். . . . . . - - 18. இலக்குக் காப்பாளர் தடைகோடு, இலக்குக்கோட்டிலிருந்து உள்ள தூரம்:4 மீட்டர். - s - “

19. ஆட்டம் தொடங்கும் இடம் ஆடுகளத்தின் நடுப்பகுதி.

20. ஆட்ட அதிகாரிகள்: 2 நடுவர்கள், 1வெற்றி எண் குறிப்பாளர்,

1நேரக்காப்பாளர். - -

2. ஆட்டத்தின் தொடக்கம் 1. ஆட்டம் எவ்வாறு தொடங்குகிறது? - -

நாணயம் சுண்டி, வெற்றி பெறும் குழு விளையாடும் பகுதியையோ, விளையாட்டைத் தொடங்குவதற்கோ தீர்மானிக்கும். விளையாட்டைத் தொடங்கும் குழு ஆரம்ப எறிதல் (Throw off) மூலம் ஆட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்ப எறிதல் சமயம் எதிர்க்குழு அனைவரும் பந்திலிருந்து 2 மீட்டர் தூரத்தில் நிற்க வேண்டும். இரண்டு குழுவினரும் அவரவர் பகுதியில் நிற்க வேண்டும். 2. வெற்றி எண் (Goal) பெறுவது எப்படி? -

ஆட்டக்காரர்கள் முழங்கால்களுக்கு மேல் பந்தைக் கையாண்டு, தவறுகள் ஏதும் நிகழாமல், பந்தை முழுமையாக இலக்குக்கோட்டைக் கடக்குமாறும், இலக்குக் கம்பங்களுக்கு இடையே குறுக்குக் கம்பத்திற்கு அடியில் பந்து கடந்து செல்லுமாறும் எறிதல் மூலமே

- வெற்றி எண் பெறப்படுகின்றது.

3. மாற்றாட்டக்காரர்கள் மாறும் முறை ஒரு குழுவிற்கு 5 மாற்றாட்டக்காரர்கள் உண்டு. வெளியேறும் ஆட்டக்காரருக்கு மாற்றாக நுழையும் மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தின் பக்கக் கோட்டின் நடுப்பகுதியிலிருந்து 4.5 மீட்டர் நீளத்தில் தனது பகுதியிலுள்ள மாற்று ஆட்டக்காரர் கோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றாட்டக்காரர்கள் ஆட்டத்தில் இடம் பெறலாம். -