பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| -- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 3.19.

4.உள்ளெறிதல் வழங்கும் முறை ஆட்டத்தில் உள்ள பந்து பக்கக் கே ாட்டிற்கு வெளியே முழுமையாக கடந்து சென்றுவிட்டால் ஆட்டம் உள் எறிதல் மூலம் தொடங்கப்படும். - பந்தை தடுத்தாடும் குழுவினரின் கைப்பட்டு அவர்களது இலக்குக் கோட்டிற்கு (இலக்கைத்தவிர) முழுமையாக கடந்து வெளியே சென்றாலும் உள் எறிதல் வழங்கப்படும்.

5. இலக்குக் காப்பாளர் எறி

ஆட்டத்தில் உள்ள பந்து இலக்குக் கோட்டிற்கு (இலக்கைத் தவிர) வெளியே முழுமையாக எதிர்க்குழுவினர் கைப்பட்டு சென்றால் ஆட்டம் இலக்குக் காப்பாளர் எறிமூலம் தொடங்கப்படும். இலக்குக் காப்பாளர் தன் எறிதலை இலக்குப் பரப்பிலிருந்து இலக்குப்

பரப்பு கோட்டிற்கு வெளியே எறிவார். - 6.இலக்குக் காப்பாளரின் உரிமைகள் 1. இலக்குக் காப்பாளர் தன்னுடைய இலக்குப் பரப்பின் உள் பந்து செல்லாதவாறு உடலின் எந்த பாகத்தையும் பயன்படுத்தி தடுக்கலாம். - - o

2. இலக்குப் பரப்பினுள் பந்தை அவர் விருப்பம்போல் கையாளலாம்.

3. தப்படி விதி இலக்குக் காப்பாளருக்குப்பொருந்தாது.இலக்குப் பரப்பிற்கு வெளியே ஆட்டத்திற்குரிய விதிகளைப் பின்பற்ற

7.7 மீட்டர் எறிதல் முறைகள் 1. ஒரு குழுவின் ஆட்டக்காரர் இலக்கை அடைவதை o எதிர்க்குழுவினர் தவறு செய்து தடுக்கும்போது. -

2. ஒரு ஆட்டக்காரர் தனது இலக்குப்பரப்பினுள் சென்று எதிர்க் குழுவினரை தடை செய்யும்போது.

3. ஆட்டக்காரர்கள் வேண்டுமென்றே தனது இலக்குக் காப்பாளரிடம் இலக்குப் பரப்பினுள் பந்தை வழங்குதல் போன்ற நேரங்களில் 7 மீட்டர் எறிதல் வழங்கப்படும். 7 மீட்டர் எறிதல் நடத்தப்படும் முறைகள்

1.7 மீட்டர் எறிதலைபெறும் ஆட்டக்காரர்.7 மீட்டர்கோட்டிற்குப் பின்னால் கோட்டைத் தொடாமல் நிற்க வேண்டும்.

2.நடுவர் விசில் ஒலிஎழுப்பியவுடன் பந்தை இலக்கை நோக்கி எறிய வேண்டும். . . . -