பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c=- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 31

அதுபோன்ற தவறைச்செய்தால், சிவப்பு (Red card) அட்டைக்காட்டி, ஆட்டத்தை விட்டே வெளியேற்றி விடுவார்.

வேறு தனியாக எந்த விதியையும் மீறாமல், மேற்கூறிய தவறுகளைச் செய்த ஆட்டக்காரரை, ஆடுகளத்தை விட்டே வெளியேற்றுமுகமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து மறைமுகத் தனி உதை எடுக்க, எதிர்க்குழுவினர் வாய்ப்புப் பெறுவர். 5. 56ol- sSlg5) (Obstruction Rule)

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகம் கொண்டு வந்தத் தடைவிதிக் கருத்தை, அகில உலகக் கால்பந்தாட்டச்சங்கம் ஏற்றுக் கொண்டது.

பந்தைத் தானும் ஆடாமல், எதிராளியையும் ஆடவிடாமல் தடை செய்வதே தடையாகும். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடுதல் அல்லது எதிராளியைத் தடை செய்ய உடம்பால் குறுக்கிடுதல், இதற்குத் தண்டனையாக மறைமுகத் தனி உதை வழங்கப்படும்.

இதனால் இன்னும் ஒரு நன்மை, இலக்குக் காவலனோ அல்லது கடைக் காப்பாளனோ (Full-back) அல்லது யாராயினும் சரி, பந்தை ஆடுகளத்திற்கு வெளியே விடுகிற எண்ணத்தில், முன்னேறி வருகிற எதிராளியின் பாதையில் குறுக்கே ஓடுவது கூடாது. இந்தத் தடை நிகழாது இருந்தால், முன்னேறுவோருக்குப் பந்தைத் தன் வசமாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கக் கூடும். இம்மாதிரித் தடை செய்வது பக்கக் கோடுகளிலும் கூட நிகழக் கூடாது. ஆகவே, பந்தைத் தன் வசமாக்க விழைபவருக்கு நல்ல வழி அமைதல் வேண்டும். அவ்வாறு தடை செய்பவர் அநாவசியமாகத் தடை செய்தக் குற்றத்திற்காக, அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, கெடுத்த அவர் பலமுறை எண்ணி வருந்தும் வண்ணம் எதிர்க்குழுவினருக்கு மறைமுகத் தனி உதை எடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

கால்பந்தாட்ட வல்லுனர்களால் கைக்கொள்ளப்பட்ட இத்திருத்தம் நடுவரின் வேலையை அதிக எளிமையாக்கலாம். இவ்வாறு தடை செய்யும் ஆட்டம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடலாம். அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக நடந்ததா எனக் கண்டுபிடிப்பது கடினமாதலால், அதற்கு மறைமுகத் தனியுதையையே தண்டனையாகத் தர வேண்டும்.