பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| -- s டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 329

ஸ்குவாஷ் மட்டை

மட்டையின் அதிக அளவு நீளம் 68.6 செ.மீ. பந்தைத் தடுக்கும். --

அடிக்கும் தலைப்பாகம் 21.5 செ.மீ. குறுக்களவு கொண்டதாகவும், 2.55 கிராம் எடை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.

வீரர்களின் கவனத்திற்கு

பந்தை அடித்தெறியும் பெட்டிக்குள் ஒருகாலை வைத்திருக்க வேண்டும். பந்தைத் தலைக்கு மேலே தூக்கி எறிந்து மட்டையால் --

அடிக்க வேண்டும். அடிபட்ட பந்து முன் சுவற்றில் அடித்தெறியும் கோட்டிற்கு (Cut line) மேலே பட்டு எதிர் வீரரின் ஆடுகளத்தின் பின்பகுதியில் (Back uெarter) விழ வேண்டும்.

பந்தை அடித்தெறிந்தவுடன் எதிர் வீரர் தனது ஆடுகளத்தில் பந்து விழுந்து எழும்பியவுடன் அல்லது பந்து விழுவதற்கு முன், பந்தைத் திருப்பி முன் சுவற்றில் அடித்து, அடித்தெறியும் பின்பகுதிக்குள் விழுமாறு அடிக்க வேண்டும். வெற்றி

ஒரு போட்டி ஆட்டம் என்பது ஐந்து அல்லது மூன்று போட்டி ஆட்டங்களைக் கொண்டது. ஐந்து ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறுபவரே வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரு ஆட்டத்தில் 9 புள்ளிகளை முதலில்

பெறுபவர்தான் வெற்றி பெறுவார். அடித்தெறியும் வாய்ப்பு பெற்றவரே

புள்ளிகளைப் பெற முடியும். -

1. முதலில் அடித்தெறிபவரிடமிருந்து வரும் பந்தை எதிர்

ஆட்டக்காரர் திருப்பி அடித்து அனுப்ப முடியாதபோது அடித்தவர்

ஒரு வெற்றிப் புள்ளியைப் பெறுகிறார்.

2.அடித்தெறிந்த பந்து எதிர்ஆட்டக்காரர்தடுத்து அடிப்பதற்குள் இரண்டு முறை தரையில் பட்டுவிட்டாலும் அடித்தவர் ஒரு வெற்றி

எண் பெறுவார்.

3. எதிர் ஆட்டக்காரர் பந்தைத் திரும்ப அனுப்பும்போது முன் சுவற்றின் எல்லைக்கோட்டிற்கு மேலோ, அடித்தெறியும் கோட்டிற்கு

கீழேயோ பட்டுவிட்டால், அடித்தவருக்கு ஒரு வெற்றி எண்

கிடைத்துவிடும். அடித்தெறிபவர் வெற்றி பெற்றுவிட்டால், தனது ஆடுகளத்திலுள்ள அடுத்த பெட்டியிலிருந்து அடித்தெறிந்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும். -

- - [T][-]