பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o * _ I o - - -

stsNo;

வரலாறு -

ஆயுதங்கள் ஏதும் இன்றி கால் மற்றும் கைகளால் தாக்கி விளையாடப்படும் டேக்வான்டோகராத்தே மற்றும் குங்பூ முதலிய தற்காப்புக் கலைகளிலிருந்து உருவான கலையாகும்.

கொரிய நாட்டைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஹாங் ஹி சோய் s என்பவரே டேக்வான்டோ விளையாட்டை உருவாக்கினார். கொரிய நாட்டு தற்காப்புக் கலையான சுபக் என்னும் தற்காப்புக் கலைதான் தற்போது டேக்வான்டோவாக உருமாறியிருக்கிறது.

1945-ஆம் ஆண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் துவக்கப்பட்டு டேக்வான்டோ பிரபலமாகியது.

ஹாங் ஹி சோய் 1966-ஆம் ஆண்டு சர்வதேச டேக்வான்டோ கழகத்தைத் தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு புதிய மாற்றத்துடன் உலக டேக்வான்டோகழகம் ஏற்படுத்தப்பட்டது. உலக கழகத்தினரே புதிய விதிமுறைகளை உருவாக்கினர்.

1988-ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் டேக்வான்டோ சேர்க்கப்பட்டது. ஆடுகளம்

டேக்வான்டோ ஆடுகளம் ஒரே அளவுகளைக் கொண்ட சதுர வடிவமாகும். 12 மீட்டர் x 12 மீட்டர் என்ற அளவுடன் கூடிய சதுர வடிவமே ஆடுகளமாகப் பயன்படுகிறது. எச்சரிக்கைக் கோடு சுற்றிலும் 1 மீட்டர் அளவுடையது. - - - போட்டி நேரம் -

ஒரு போட்டி ஆட்டத்திற்கு மூன்று சுற்றுக்கள் உண்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன.

இடைவேளை

ஒவ்வொரு 3 நிமிடசற்றுக்கும் 1 நிமிடம் இடைவேளை உண்டு.