பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 333

என்று கூறியவுடன் வீரர்கள் நேர்நிலையில் நின்று பணிந்து வணங்கிக் கொள்ள வேண்டும். - - * . -

ஜூன் - பி (JooN-B = READY) என்றும், ஷி - ஜாக் (SH JAK = START) என்றும் கூறிய பின்னர் போட்டி துவங்கப்பட வேண்டும். - உங்கள் நினைவிற்கு

ஒரு போட்டியில் மூன்று சுற்றுகள் உண்டு. ஒரு சுற்றுக்கு மூன்று நிமிடங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு நிமிடம் ஓய்வு. ஒரு போட்டியாளரை அழைத்தவுடன் ஒரு நிமிடத்திற்குள் களத்திற்கு வர வேண்டும். தவறுகளுக்கு தண்டனையாக 1 புள்ளி குறைக்கப்படும். மேலுடலில் தாக்கினால், 1வெற்றிப் புள்ளி கிடைக்கும். முகத்தில் தாக்கினால், 2 வெற்றிப் புள்ளி வழங்கப்படும். போட்டி முடியும் முறைகள்

1. எதிர் போட்டியாளர் கீழே விழும்போது, 2. போட்டியாளர் விலகும்போது, 3. போட்டியாளர் தகுதியிழக்கும்போது, 4. போட்டியாளர் அதிக வெற்றி எண்கள் பெறும்போது, 5. போட்டியை நடுவர் நிறுத்தும்போது.