பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விளையாட்டுக்களின் விதிகள் *ES

6. ஆட்டக்காரர்களுக்கு அறிவுரை 1. விளையாட்டுச் சாதனங்களைப் பற்றி (Equipments)

விதிகளின்படி, உங்களது ஆட்டக் காலணி இன்னும் மற்றப் பொருட்கள் சரியாக உள்ளனவா என்று முன்கூட்டியே கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நடுவரின் கண்களுக்கு அக்குறை தென்பட்டு, அதன்படி நீங்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேற நேர்ந்தால் உங்களுடைய குழுவுக்கு உம்முடைய பெரும்பணி சிறிது நேரம் கிடைக்காமற் போகலாம். அல்லவா ஆகவே அவைகளைப் பற்றி ஏதாவது ஐயம் உங்களுக்கு இருந்தாலும் ஆட்டத்திற்கு அல்லது இடைவேளைக்கு முன் நடுவரிடம் காட்டித் தெரிந்து கொள்ளுங்கள். குமிழ்களை நல்லமுறையில் வைத்துக் கொள்வது நல்லது. அதில் தவறினால் விதியை மீறியவர்களாவீர்கள்.

2. ஆட்ட நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை

நடுவரின் முடிவைக் குறித்து எந்தவிதமான வினாக்களையும் எழுப்பக் கூடாது. ஆட்ட நேரத்தில் ஆட்டத்தைப் பற்றி எழுகின்ற எந்த முடிவும் அவரது முடிந்த முடிவாகும். அவ்வாறு ஏதாவது விவாதம் எழுந்தால் நீங்கள் எப்பொழுதும் நடுவரையே சார்ந்து பேச வேண்டும்.

ஆடுகளத்திற்கு வெளியே தவறான முறையில் நடுவரிடம் நடந்து கொண்டாலும், அது ஆடுகளத்தின் உள்ளே நிகழ்ந்ததாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவீர்கள்.

உங்களுக்கு ஏதாவது இலேசான காயம் ஏற்பட்டாலும், அதைப் பெரிதுபடுத்தி, நடுவரின் கவனத்தை உங்கள் பக்கம் இழுக்கக் கூடாது. பெரிய காயம் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், நடுவரே உமக்காக வேண்டியதைச் செய்து கவனிப்பார். ஆட்டத்தில் ஏற்படும் இக்கட்டான நேரங்களில் எந்த ஆட்டக்காரரும் நடுவராகவோ அல்லது

துணை நடுவராகவோ மாறக்கூடாது.

ஆட்ட நேரத்தில் இலக்குக் காவலரை மாற்றினால் அதை உடனே நடுவருக்கு அறிவித்துவிடவேண்டும்.

இலக்குக் காவலர் அல்லது வேறு ஒரு ஆட்டக்காரர் மாற்றப் பட்டு, ஒரு மாற்றாட்டக்காரர் உள்ளே வந்து விளையாட வேண்டுமென்றால் கீழே காணும் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

(அ) யாருக்காக யார் மாற்றப்படுகிறார் என்பதை ஆட்டக்காரர்கள் மாறுவதற்கு முன்பாகவே, நடுவருக்குக் கூறிவிடவேண்டும்.