பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 339

தண்ணில் நீந்தார், உமிழார், விளையாடார் என்று ஆசாரக்கோவை சுட்டிக்காட்டிக் கட்டுப்படுத்திய வரிகள் உண்டே அதுபோலவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் வசித்த மக்கள் ஒருவித பத்தாம் பசலித்தனமான கொள்கையில் ஊறிப் போயிருந்தார்கள். -- --

ஆறுகளில், குளங்களில் மற்றும் வெளிப்புற நீர்ப்பகுதிகளில் குளித்தால், கொள்ளை நோய்களும், தொத்து வியாதிகளும் நாட்டில் கொடுமையாகப் பரவும் என்பதுதான் கோமாளித்தனமான அந்தக் கொள்கை. - - -

அத்தகைய அறியாமை நிறைந்த வதந்தி சூழ் வாழ்க்கை முறை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மறைந்தோடியது. அதற்குப் பிறகு நீச்சல் விளையாட்டில் மக்கள் முறையாக, பெருவிருப்போடு ஈடுபடத் தொடங்கினார்கள்.

இதற்குப் பிறகுதான், இங்கிலாந்தில் நீச்சல் போட்டிகள் நிறைந்த அளவில் நடைபெறத் தொடங்கின. வெறும் பொழுதுபோக்காக நீந்திய மக்கள், அதனைப் போட்டி விளையாட்டாக மாற்றி அமைத்து இன்பங் கண்டனர். --

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடப்பதை ஒரு தீரம் மிகுந்த சாதனையாக நீச்சல் வீரர்கள் கருதினர். அதிலே ஆண் பெண் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். -

1875-ஆம் ஆண்டு முதல் முதலாக ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர் மத்தேயு வெப் என்பவர். ஜெர்டுரூட் எட்ரிலி என்ற அமெரிக்கப் பெண்மணி, முதன் முதலாக அதனை நீந்தி வென்ற பெருமையைப் பெற்றவர். புளோரன்ஸ் சாட்விக் என்ற அமெரிக்கப்பெண், நீந்திச்சென்று கடந்த பின் திரும்பி வந்து சேர்கிற புதிய சாதனையையே ஏற்படுத்தினர்.

இந்திய நாட்டு நீச்சல் வீரர் சென் என்பாரும் ஒரு அரிய சாதனையை ஏற்படுத்தினார். -

எனவே காலங்காலமாக நீச்சல் விளையாட்டானது மனித இனத்தை ஆதரவாக அனைத்து, ஆனந்தம் என்னும் அமுதினை ஊட்டிக் காத்துக்கொண்டு வருகிறது.

நீச்சலில், எல்லா உடல் உறுப்புக்களும் வேதனை கலவாத இன்பமூட்டும் பயிற்சியைப் பெற்று, பலம் பெறுவதால்தான், இதனை ஒரு சிறந்த விளையாட்டு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

வாழ்க்கையில் நீந்திக் கரை சேருகின்ற பெருங்கடமைக்குள் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு நித்தம் நித்தம் நீருள்ளே நீந்தி