பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ

340 விளையாட்டுக்களின் விதிகள்’ =

விளையாடும்போது, அளப்பரியஆனந்தம் கிடைக்கிறது.நிம்மதியான ஊக்கம் கிடைக்கிறது. சிறந்த உடல் வளம் கிடைக்கிறது.

ஒரே முயற்சியில் எத்தனை பயன்கள்! நாமும் நீந்துவோம். நலன்களை மாந்துவோம்! - -

2. வாருங்கள் - நீந்துவோம்!

ஆதிகாலத்தில் மனித சமுதாயம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்தது முதல் இன்று வரை தண்ணி மனிதனை விட்டுப் பிரிய முடியாத, பிரிக்க முடியாத ஓர் இயற்கை வளம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. -

காட்டில் வாழ்ந்த மனிதன் வீடுகளைக் கட்டிக்கொண்டு, நாகரீகமாக வாழ வழிவகைகளை தேடிக்கொண்டது போல மனிதனோடு பிறந்த விளையாட்டுக்கள் ஆதிகாலத்தில் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், காட்டு மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது, தாண்டியது, தண்ணில் நீந்தியது, ஈட்டி எறிந்தது, அம்பு எய்தது முதலியன எல்லாமே இன்று பல்வேறு விளையாட்டுக்களாக மாற்றம் பெற்று ஏற்றமுடன் உலகை உலா வந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகக் காணும் உண்மை.