பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சியை செய்ய வேண்டும்.

c= டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 347

உடலையும் தயார் படுத்திக் கொள்ள சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிகளின் மூலம் உங்கள் கைகளும் தோளும் வலிமை பெறும். . . - பயிற்சி 1

தோள் அளவுள்ள தண்ணில் நின்று கொள்ளுங்கள். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டிவைத்திருந்த பிறகு முன்புறமாக கைகளை கொண்டு வந்து சிறு வட்டமாக வருவதுபோல கைகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் விரைவாக கொண்டு வரவும். குறைந்தது பத்து முறையாவது இந்த பயிற்சியை செய்ய வேண்டும். கைகளை முன்னும் பின்னும் சுழற்றி வேகமாக இயக்கி பயிற்சி செய்தல் நல்லது. . .. - - பயிற்சி 2

மார்பளவுத் தண்ணில் நின்றுகொண்டு ஒரு கையை மார்புக்கு முன்புறமாகவும் அடுத்தக் கையை மார்புக்கு பின்புறமாகவும் நீட்டி வைக்கவும். - -

நீட்டிய கைகள் இரண்டையும் சக்கரம் சுற்றுவது போல மேலிருந்து கீழாக பக்கவாட்டில் உயரமாக வருவதுபோல கைகளை சுழற்ற வேண்டும். இந்த பயிற்சிகளை பலமுறை செய்து பழகுங்கள்.

தோள் உயரத் தண்ணிரில் நின்று கொண்டு ஒரு காலின் முழங்காலை மடித்து வைத்து மார்புக்கு முன்னே நன்றாக உயர்த்தவும். மற்ற ஒரு காலில்தான் இப்போது நீங்கள் நிற்பீர்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால்தான் தாங்குகிறது என்பதால் அசையாமல் இந்த

மடித்தக்காலை மேலே கொண்டு வரும்போது இடுப்பு தொடை மற்றும் முதுகுப்புறத் தசைகளையெல்லாம் நன்கு இயங்கும். ஒவ்வொரு காலுக்கும் இதேபோன்ற பயிற்சியை மாற்றிமாற்றி பத்து முறை செய்யவும். - -

பயிற்சி 4 . . . . . . .--

நீச்சல் குளத்தில் பொறுத்தப்பட்டுள்ள கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு (கைப்பிடியில்லையேல் குளக்கரை பகுதியைப் பிடித்துக் கொள்ளலாம்) குப்புறப் படுத்துக்கொண்டு கால்களைப் பின்புறமாக நீட்டி மிதந்துகொள்வது போன்ற நிலையில் இருக்க வேண்டும். இப்போது விரைப்பாக நீட்டியுள்ள கால்களை ஒன்று மாற்றி ஒன்று மேலும் கீழும் இயக்கிட வேண்டும்.