பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 33

(ஆ) ஆடுகளத்தில் நுழைவதற்கு முன், குறிப்பிட்ட அந்த ஆட்டக்காரர், நடுவரின் அனுமதி சைகைக்காகக் காத்திருக்க வேண்டும்.

(இ) நுழைகின்ற மாற்றாட்டக்காரர் ஆட்டம்நிறுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் நடுக்கோடு வழியாகத்தான் நுழைய வேண்டும்.

(ஈ) வெளியேறும் ஆட்டக்காரர் ஆடுகளத்தை விட்டு வெளியேறும்வரை மீண்டும் ஆட்டம் தொடங்காது.

தண்டனை: யாராவது ஒரு ஆட்டக்காரர் இந்த விதியை மீறினால், நடுவரால் கடுமையாக எச்சரிக்கப்படுவார்.

3. அயலிடத்திலிருந்து தப்ப

அயலிட விதிகளில் இருந்து நீங்கள் தப்புவதற்கும் வேறு சில

முக்கிய வழிகள் உள்ளன. அவைகளைப் புரிந்து கொண்டு, ஆட்ட

நேரத்தில் நினைவு வைத்து ஆடினால், ஆட எளிதாக இருக்கும்.

(அ) அயலிடத்தில் இருந்து கொண்டு, அதனால் பயன் அடையாதவாறு இருக்கும் வரை, நீங்கள் அயலிடத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட முடியாது. அதாவது, நீங்கள் அயலிடத்தில் இருந்தாலும், ஆட்டத்திற்கு இடையில் இடையூறாக இருப்பதோ, எதிராளிக்கு இடைஞ்சலாக விளங்குவதோ அல்லது ஆடுவதற்கு முயற்சிப்பதாக பாவனை செய்வதோ கூடாது. இலக்குக் காவலனுடைய நோக்கை (view) மறைக்கும் வகையிலும் நின்று கொண்டிருக்கக் கூடாது என்பதையும் கருத்தாக மனதில் கொள்ள வேண்டும்.

(ஆ) உமது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, பந்துக்கு முன்னால் நீங்கள் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது உமக்கு முன்னால் இரண்டு எதிராளிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறியுதை முனையுதை, உள்ளெறிதல் முதலியவற்றில் இருந்து பந்தை நீங்களே நேராகப் பெற்றால், நீங்கள் அயலிடத்தில் இல்லையென்பது உறுதி.

(இ) அயலிடத்தில் நின்று கொண்டே இருந்துவிட்டு, பின் சரியான இடத்தில்தான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்க்குழுவினரில் ஒருவர் பந்தை விளையாடுவதனாலும், அல்லது அடுத்ததாக உமது பாங்களில் ஒருவர் பந்தை விளையாடும் பொழுது, நீர்பந்துக்கு முன்னால் நின்று கொண்டிருக்காத பொழுதும் அல்லது எதிர்க்குழுவினர் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டாலும்