பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 விளையாட்டுக்களின் விதிகள்

தண்ணில் குப்புறப்படுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தலையும் இடுப்புப்பகுதியும் தண்ணி மட்டத்தில் இருக்க வேண்டும். கால்கள் சமமாக நேர்நிலையில் இல்லாமல் தாழ்வாக இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். முகம் தண்ணிருக்குள் காதளவு மூழ்கி இருக்கலாம்.

இப்போது கைகளை முகத்தின் முன்புறம் கூம்புபோல் நீட்டி பக்கவாட்டில் அசைத்து உள்ளங்கைகளால் தண்ணிரை கீழ்நோக்கித் தள்ளி கைகள் உங்கள் உடல் அருகே வந்து வளைத்து கைகளைத் தோள் அளவிற்குக் கொண்டுவந்து முகத்தருகே கொண்டு வந்து மீண்டும் தண்ணிரைத் தள்ள வேண்டும். அதே சமயத்தில் கால்கள் இரண்டும் இடுப்பருகில் வரும்படிவளைத்து பாதங்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைத்து, தண்ணிரை பக்கவாட்டில் உதைக்க வேண்டும்.