பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விளையாட்டுக்களின் விதிகள்

(ஆள் உள்ளபடி) நீங்கள் சரியான இடத்தில் இருப்பதாகவே கருதப்படுவீர்கள்.

4. தவறு நேராமல் தடுத்துக் கொள்ள

இதுபோன்ற முக்கியமான விதிகளைக் கற்றுணர்ந்து, தவறுகள் நேராமல் உங்களைத் தடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். நடுவரால் தண்டிக்கப்படாமலோ அல்லது எச்சரிக்கப்படாமலோ ஆட முயற்சிக்க வேண்டும். ஒரு ஆட்டக்காரர் எச்சரிக்கப்படுகிறார் என்றால், அவருடைய தவறுகள் அபாயம் விளைவிக்கக் கூடியனவாக உள்ளன என்றே பொருள். அதற்காக அவரால் எச்சரிக்கப்படுவதும் இயற்கையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள், ஆட்ட விதிகளின் இயல்பை நன்கு தெளிவிப்பதோடு, நல்லதொரு உணர்ச்சியை ஆட்டத்தில் உண்டாக்கவும் உதவும்.

(அ) நீங்கள் தவறுக்கு உள்ளானால், அதற்காகப் பழிக்குப் பழி வாங்க முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அந்தச் செயலுக்காக, நீங்கள் தண்டனை பெறுகின்ற நிலைமைக்கு உள்ளாகின்றீர்கள். அதனால் ஆடுகளத்தை விட்டோ அல்லது ஆட்டத்தை விட்டோ வெளியேற்றப்படுகின்ற சூழ்நிலையை நீங்களே உண்டு பண்ணிக் கொள்ளுகின்றீர்கள்.

(ஆ) எதிராளி மேல் ஏறிக் குதிப்பதானது, எதிர்பாரதவிதமாக நடக்க முடியாதது என்பதை உணர்ந்த கொள்ள வேண்டும்.

(இ) மற்றவர் பந்தைக் கையால் தொட்டால் (Hands) அதை நீங்கள் கூற வேண்டாம். ஏனெனில், சூழ்நிலையைக் கண்காணித்து நடுவரே அதற்குரிய முறையில் செயல்படுவார். நீங்கள் தவறென்று எண்ணுவதை, தற்செயலாக நிகழ்ந்ததென்று நடுவர் கருதலாம். அப்படிக் கூறி உங்களுக்கும் உங்களுடைய குழுவுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை (Disadvantage) உண்டு பண்ணிக் கொள்ளாதீர்கள்.

(ஈ) மற்றவர் வந்து உங்களை மோதினாலும், கோபம் கொள்ளாது அமைதியைக் கடைப்பிடிக்க முயலுங்கள்.

(உ) விதிப்படி மெதுவாக இடிக்கலாம் என்ற முறையில் இடிக்கப்பட்டு, நீங்கள் கீழே விழுந்தால், அது உங்களுக்கு இழுக்கைத் தருவதாகாது. நீங்கள் நேர்வழியாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு காலால் எதிராளி உங்களைத் தடுத்து நிறுத்தலாம். இவையெல்லாம் உங்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையுமே தவிர வேறல்ல. எதிராளியை நீங்களும் இடிக்கலாம்.