பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 363

நல்லது. பாதுகாப்பானதும்கூட. நன்றாக நீந்தக் கற்றுக் கொண்ட பின்னரே ஆழமுள்ள பகுதிக்குச் செல்லவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். - o போட்டிகளில் கலந்து கொள்வோர்

நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள், தாங்கள் எந்த முறை நீச்சலில் பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறீர்களோ அந்த முறை நீச்சலில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, தடையில்லா நீச்சலில் பயிற்சி பெற விரும்புபவர்கள் முதலில் 100 மீட்டர் நீந்த வேண்டும். நீங்கள் 100 மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க எடுத்துக்கொண்டநேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் 100 மீட்டர் தூரத்தை நீந்துங்கள்; நேரத்தையும் மறவாமல் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் வேகம் கூடியதா, குறைந்ததா என்பதை நீங்கள் குறித்து வைத்துள்ள நேரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நீந்தும் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு மேலும் வேகமாக நீந்த இந்த நேரக் குறிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். - -

ஒவ்வொரு முறை நீந்தும்போதும், நீச்சல் போட்டியில் கலந்து கொள்வது போன்ற உணர்வுடன் வேகமாக நீந்த வேண்டும். அப்போதுதான் கடுமையானப் பயிற்சியை மேற்கொண்டதாக உணர்வீர்கள். எப்போது நீந்தினாலும், நீங்கள் நீந்தும் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டு பயிற்சியை உற்சாகத்துடன் தொடருங்கள். தொடக்கப் பயிற்சி -

நீச்சல் போட்டியின்போது, நீந்தத் தொடங்கும் தொடக்கப் பயிற்சியும் தெரிந்து கொள்வது அவசியம். அதேபோல் எதிர்புறம் உள்ள சுவற்றினைத் தொட்டுவிட்டு திரும்பும் நுணுக்க முறையினையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

துவக்கம் - = -

போட்டித் தொடக்கத்தின்போது, வேகமாக தண்ணில் பாய்ந்து குதித்துச் செல்ல வேண்டும். உங்கள் தொடக்கம் சரியானதாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து மீட்டர் வரை வேகமாக முன்னேறிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.