பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 விளையாட்டுக்களின் விதிகள் >

பயிற்சி நேரம் மொத்தம், நீந்திய நேரம், எத்தனை முறை நீந்தப்பட்டது என்பதை தினமும் குறித்து வையுங்கள். உங்கள் முன்னேற்றம் பற்றிய உங்கள் கருத்தைக்கூட நீங்கள் எழுதி வைத்துக்கொண்டால், உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்து கொண்டது போலாகும். தவறுகளை திருத்திக் கொள்ளவும், உங்கள் திறனை வளர்க்கவும் மிகவும் துணைநிற்பது சுயவிமர்சனம் என்பதை மறவாதீர்கள்.

நீந்தக் கற்றுக்கொண்டநீங்கள் போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பீர்கள். நீச்சல் குளம் பற்றிய முழு விபரங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். நீச்சல் குளத்தின் அளவுகள், ஆழம், போட்டிக்குரிய அளவுகள், நீந்தும் பாதை, துவக்க மேடை முதலிய விபரங்கள் சுருக்கமாக அடுத்த பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தகவல்களையும் உங்கள் பயிற்சியாளர் அல்லது நீச்சல் குளத்தின் பொறுப்பாளரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

துவக்க மேடை .=-”

8. நீச்சல் குளம்

அளவு

சர்வதேச தரம் உள்ள நீச்சல் குளத்தின் நீளம் 50 மீட்டர் அகலம், 21 மீட்டர், ஆழம் 1.8 மீட்டர் இருக்கும். குளத்தின் நடுப்பகுதியை