பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 369

நோக்கி சிறிய சரிவு அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் குளத்தின் ஆழம் 2.5 மீட்டர் இருக்க வேண்டும்.

நீருள் பாயும் நிகழ்ச்சிகள் நடக்கும் குளத்தின் ஆழம், துவக்கப்பகுதியில் 20 மீட்டர் நீளம் வரை ஆழம் 1 மீட்டர் இருக்க வேண்டும். படிப்படியாக உள்ள சுற்றுச்சுவர் வரை 1.8 மீட்டர் முதல் 2.8 மீட்டர் வரை எதிர்புறம் அமையுமாறு இருக்கும். - பந்தயப் பாதைக்கோடு (Lane Line) -

நீச்சல் குளத்தில்8 பந்தயப் பாதைகள் இருக்க வேண்டும். ஒரு பந்தயப் பாதையின் அகலம் 2.5 மீட்டர் இருக்க வேண்டும். முதல் பந்தயப் பாதைக்கும் மற்றும் எட்டாவது பந்தயப் பாதைக்கும் சுற்றுச் சுவற்றிற்கும் இடையில் 50 சென்டி மீட்டர் அகலம் இடைவெளி இருக்க வேண்டும். -

ஒவ்வொரு பந்தயப் பாதைக்கும் இடையில் 5 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் விட்டமுள்ள மிதவைகள் இணைக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். --

நீச்சல் குளத்தின் தரைப்பகுதியில் ஒவ்வொரு நீந்தும் பாதையும் தெளிவாகத் தெரியும்படி ஆரஞ்சு அல்லது கருப்பு வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். கோட்டின் அகலம் 20 சென்டி மீட்டர் முதல் 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். மின்னணு கருவி

போட்டியின் போது நீந்தித் திரும்பும் எல்லைப்பகுதி சுவற்றில் மின்னணு தொடு அட்டைப் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு சென்டி மீட்டர்கனமுள்ள இந்த மின்னணு அட்டைதண்ணி மட்டத்திலிருந்து 30 சென்டிமீட்டர் மேலேயும், 60 சென்டிமீட்டர் தண்ணிருக்குள்ளும் இருக்குமாறு பொருத்தப்ப்ட்டிருக்கும். . . துவக்க மேடை o

நீச்சல் போட்டிகளுக்குரிய துவக்க மேடை தண்ணீர் மட்டத்திலிருந்து 50 சென்டி மீட்டர் முதல் 75 சென்டி மீட்டர் வரை உயரத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு துவக்க மேடையின் அளவு 50 செ.மீ. x50 செ.மீ. அளவுகள் சிமெண்டினால் கட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு மேடையின் நான்கு பக்கங்களிலும் துவக்க மேடையில் வரிசைப்படி எண்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரம்ப எண் வலது புறத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதாவது எண் 1 வலதுபுறமிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.