பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 377

ஏரி, குளம், ஆறு முதலிய நீர் நிலைகளில் நீச்சல் கற்றுக் கொண்டவர்கள் போட்டியின்போது கடைபிடிக்கப்படும் விதிகளை கடைபிடிக்கச் சிரமமாக இருக்கும் என்பதால், நீச்சல் குளங்களில் பயிற்சிகளை மேற்கொண்டு விதிகளைத் தெரிந்துகொண்டு போட்டிகளில் பங்குபெறுவது சாலச் சிறந்தது.

சில ஆலோசனைகளாக தங்களுக்கு கூறியுள்ள கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் வெற்றிபெற வாய்ப்புண்டு. வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கமும், கடுமையான பயிற்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் மனதிலே நிலைநிறுத்திக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். o

நீண்ட தூரப் போட்டிகள்

100 மீட்டர்,200 மீட்டர்,400 மீட்டர்,800 மீட்டர் என போட்டிகள் நடைபெறும். மேலும் மார்பு நீச்சல், பட்டாம்பூச்சி நீச்சல், தடையில்லா நீச்சல், மல்லாந்து நீந்துதல் முதலிய முறைகளில் போட்டிகள் நடக்கும். மேலும், ரிலே என அழைக்கப்படும் தொடர் நீச்சல் போட்டியும் நடைபெறும். இவைகளில்லாமல் நீண்ட தூரப் போட்டிகள் பெரிய ஏரிகளிலும், ஆறுகளிலும், கடலிலும் நடத்தப்படுவதுண்டு. இந்தப் போட்டிகள் நீண்டதுரமான 10 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருக்கும்.

நீண்ட தூர நீச்சலுக்கு முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண நீச்சல் குளத்தில் செய்யும் பயிற்சிகளைவிட மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரிய ஏரிகளிலும், ஆறுகளிலும், கடலிலும் பயிற்சி செய்வது மிகவும் கடுமையான ஒன்றாகும். உரிய பயிற்சியாளர்களின் துணையோடு நீந்தப் பழகுதல் மிகவும் அவசியம்.

எச்சரிக்கை

ஏரி, குளம், ஆறு முதலியவற்றில் ஆபத்துக்களை நாம் சந்திக்க நேர்வதில்லை. ஆனால், கடலில் நீந்தும்போது பலதரப்பட்ட ஆபத்துக்கள் வர வாய்ப்புக்கள் இருக்கிறது.

கடலின் தன்மை, அலைகளின் வேகம், கடலில் ஏற்படும் சுழற்சி, பருவ காலம் முதலியவற்றிற்கு ஏற்றாற்போல் கடலில் நீச்சல் பயில்வது அவசியம். சில நேரங்களில் மணல் கலந்த அலையும் வீசுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் கடல் நீச்சல் சற்று கடினமானதுதான்.