பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விளையாட்டுக்களின் விதிகள் .

(ஆ) ஒறுநிலையுதை எடுக்கும் முன், நடுவரின் விசிலுக்காகக் காத்திருக்க வேண்டும்.

(இ) ஒறுநிலையுதை எடுக்கும் நேரத்தில், இலக்குக் கம்பங்களுக்கு இடையே, கடைக்கோட்டின் மேல் நிற்கும் இலக்குக் காவலன் அங்கும் இங்குமாக நடக்கலாம். ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் ஆட்டக்காரர், தன்னுடைய இடத்தை விட்டு உள்ளே ஓடி வரக்கூடாது. அவ்வாறு ஓடி வந்தால் முதன்முறை எச்சரிக்கப்படுவார். மீண்டும் அதை மீறிச் செய்தால், அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

(ஈ) உதைப்பவர் பந்தை முன்னோக்கியே உதைக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

(உ) ஒறுநிலை உதையில் பந்தை இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற்று விட்டால் (Goal) தடுக்கும் குழுவினர் எந்த விதியை மீறி நடந்திருந்தாலும் அதையெல்லாம் தள்ளிவிட்டு, வெற்றி எண் என்றே நடுவர் அறிவித்துவிடுவார்.

7. நடுவருக்குரிய குறிப்புகள்

1. ஆட்டம் தொடங்குவதற்கு முன்

(அ) போட்டி ஆட்டம் (Match) தொடங்குவதற்கு முன்பாக, ஒருமுறை ஆடுகளத்தைப் பார்வையிட்டு, எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இயற்கை நிலை மோசமாக இருந்தாலோ அல்லது ஆடுகளத்தை நல்ல நிலையில் வைத்திருக்காவிட்டாலோ அல்லது அதில் ஆடும் ஆட்டக்காரருக்கு அபாயம் நேரக்கூடும் என்ற நிலை இருந்தாலோ, விளையாடுவதற்கு நடுவர் அனுமதி தரக்கூடாது. கோடுகள் ஒழுங்காகப் போடப் பட்டிருக்காவிடில் நேரம் இருந்தால் ஆட்டத்திற்கு முன்னதாகக்

கோடுகளைச் சரியாகப் போடச் செய்ய வேண்டும்.

(ஆ) கொடிக்குச்சிகள் 5 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். குட்டையானவைகளால் எப்போதும் அபாயம் நேரலாம்.

(இ) முனைக்கொடிகள் ஒண்மையான வண்ணம் உள்ளதாக (Light colours) esolosolob3, G5,16&TGib.

(ஈ) இலக்கைச் சுற்றி உள்ள வலைகள் சரியாகக் கட்டப்

பட்டிருக்கிறதா? அதில் ஏதாவது ஓட்டைகள் (Holes) இருக்கிறதா என்பதையும் முன்பே கவனிக்க வேண்டும்.