பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்களைப் பற்றி

அறிஞர்கள் சொல்கிறார்கள்

விளையாட்டுத் துறையின் வியன்மிகு கலைச்சொற்கள் குற்றால அருவி ஓடி வருவதைப்போல தங்கு தடையின்றிய பேச்சு, ஆழமான கல்வி, பரந்துபட்ட உலக அறிவு, பண்பாட்டின் சிகரம், இனிமையானவர், நகைச்சுவை நல்லரசு, செயலிலே விறுவிறுப்பு, விளையாட்டுத்துறையிலே ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த நிலை. இவர்தான் நவராஜ் செல்லையா.

- தமிழ்த் தொண்டர் கோ.முத்துப்பிள்ளை

%

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் ஒய்வறியாத உழைப்பாளர். அவரது சுறுசுறுப்பும், போலித் தனமில்லா பேச்சும், தளராத தன்னம்பிக்கையும் அவரைச் சுற்றி இருக்கும்

எல்லோரையும் எழுச்சி பெற வைக்கும்.

- டாக்டர் பொற்கோ

=-_ ~ - . _2^

- / \

~ -& - *- --

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையாஉடற்கல்விக்கு அளித்த

அர்ப்பணிப்பு, நண்பர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு,

ஆர்வம், பாசம், பணிவு, இனிய சொற்கள், ஆற்றிய உதவி

களும், பணிகளும் அவர் மறைந்தாலும் என்றும் ஆயிரக்கணக்

கானோர் நெஞ்சங்களில் மறையாது. அவர் ஏற்றிய தீபம் அணையாது, மேலும் சுடர் விட்டுப் பிரகாசிக்க நம்மைப்

போன்றோர் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- பேராசிரியர் இரத்தின நடராஜன்