பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 37

(உ) முயற்சியுடன் பந்தைப் பிடிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்றவாறு (சில சமயங்களில்) வேண்டுமென்றே குறுக்குக் கம்பத்தைக் கீழாக இலக்குக் காவலர்கள் இழுத்து வைத்திருப்பார்கள். இதுபோன்ற பண்பற்ற செய்கைகளைக் கவனிக்க வேண்டும்.

(ஊ) போட்டி நடத்துகின்ற சங்கம் (Home club) விளையாடு வதற்கான பந்தைக் கொடுக்க வேண்டும். அப்பந்து வேண்டிய அளவு காற்று அடிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்ப்பதுடன், ஓரிரு பந்துகளைக் கைவசமாக வைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தபட்ச காற்றளவு 410 கிராம். அதிக அளவு 450 கிராம் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

(எ) ஆட்டத் தொடக்கத்தில் இலக்குக் காவலனாக யார் பணியாற்றுகிறார் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், மாற்றம் அறிவிக்கப்படும்வரை, அந்த இடத்தையோ அல்லது அந்த உரிமையையோ அடைய, யாரையும் அனுமதிக்கக் கூடாது.

(ஏ) ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னோ, இடைவேளை நேரத்திலோ, ஆட்டக்காரர்களுடைய காலணிகளையும், மற்ற உதவி சாதனங்களையும், பரிசோதனை செய்வது நல்லது. அவைகளைப் பற்றி ஏதேனும் ஐயம் வந்தால், எந்த நேரத்திலும் சோதனை செய்யலாம்.

விளையாட்டுக்காரருக்கு வேண்டியவை என்ற இந்த விதிக்குப் புறம்பாக நடப்பவர்களைப் பற்றி மற்றவரின் முறையீட்டுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. தவறைக் கண்டுபிடித்த உடனேயே, தண்டனையைக் கொடுத்து விடவேண்டும். தவறை எடுத்துக் கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஒரு ஆட்டக்காரர் அணிந்திருப்பவை, ஆட்டத்தில் மற்றவர் களுக்கு ஊறு விளைவிக்கும் என்று நடுவர் கருதினால், அதனை உடனே நீக்கிவிடுமாறு ஆணையிடவேண்டும். அந்த ஆட்டக்காரர் அதை செய்யத் தவறினால் அவரை ஆடுகளத்தை விட்டே வெளியேற்றிவிட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிக்குள்ளான ஆட்டக்காரர். மறுபடியும் மற்றப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமானால் கால் பந்தாட்டக் கழகத்திடமோ (Foot ball Association) அல்லது பதிவு செய்யப்பட்டதலைமைக் கழகத்திடமோ ஆடுவதற்கு அனுமதி பெற வேணடும். 2. ஆட்டத்தைத் தொடங்க:

(அ) முதலில் எந்தக் குழு நிலையுதை வாய்ப்புப் பெற்றுள்ளது என்பதைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஆட்டத்தில் பங்கு பெறும்