பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விளையாட்டுக்களின் விதிகள் >

ஒரு ஆட்டக்காரரே பந்தை உதைத்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

(ஆ) நிலை உதை எடுக்கும் முன், மற்ற எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் யாரும் பந்திடம் உரிமையுடன் நெருங்கி வர அனுமதிக்கக் கூடாது.

(இ) தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலொழிய, இடைவேளை ஓய்வு நேரத்தை 5 நிமிடத்திற்கு உள்ளாகவே

வரையறுக்க வேண்டும்.

(ஈ) மிகை நேரம் (Extratime) தேவைப்படுமானால் கீழ்க்கண்ட முறையில் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். பொதுவாக ஆட்ட நேரத்தின் முடிவில் உள்ள இடைவேளைக்கு உரிய நேரமும், மிகை நேரப் பகுதிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குவதற்குரிய நேரமும் நடுவரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.

(உ) ஆட்டக்காரர்களில் பலர், நடுவரின் விசில் கேட்ட உடனேயே, எதிர்க் குழுவினரின் 10 கெச வட்டத்திற்குள்ளேயோ அல்லது நடுக்கோட்டைத் தாண்டியோ ஓடுகின்றனர். இது தவறான முறையாகும். ஆட்டம், நிலை உதைக்குப் பிறகே தொடங்குகிறது. நடுவரின் விசிலால் மட்டுமல்ல.

(ஊ) ஆடுகளத்தை விட்டுப் பந்து வெளியே போகிறபொழுது, உடனே விசில் மூலம் சைகைக் கொடுத்து ஆட வேண்டும். அவ்வாறு சத்தம் கொடுக்கும் வரை, பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். அவ்வாறு தெளிவாக அறிய இயலாவிடில், உடனே துணை நடுவர்களை கலந்து முடிவெடுத்து, அதன்படி செயல்பட வேண்டும்.

(எ) உங்கள் முடிவை எதிர்த்து யாராவது கேட்டால், முடியாது என்றபடி தலையை அசைத்து விட வேண்டும். அல்லது விளையாடுங்கள் என்றாவது சொல்லிவிட வேண்டும். ஒருமுறை எடுத்த முடிவை எக்காரணத்தை முன்னிட்டும் மாற்றவே கூடாது.

(ஏ) கடைக் கோட்டையோ அல்லது பக்கக் கோட்டையோ தாண்டிபந்து முழுவதும் கடந்து சென்றால்தான், அது ஆடுகளத்திற்கு வெளியே சென்றது என்று பொருளாகும். பந்து கோட்டின் மேல் உருண்டு சென்றால், அது ஆடுகளத்தினுள் இருப்பதாகவே கருதப்படும்.

(ஐ) நடுவரின் விசிலால் ஆட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. துணை நடுவரின் கொடி அசைவினால் அல்ல. அவர் கொடி