பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விளையாட்டுக்களின் விதிகள் -E

கொண்டிருக்கும் பொழுது, அவன் ஆடியிருக்கிறான் என்பதிலே அல்ல. அவனுடைய குழுவினர் பந்தை ஆடிக் கொண்டிருக்கும் பொழுது அவன் எங்கு இருந்தான் என்பதில்தான் இருக்கிறது. அதில் உள்ள குறிப்பு என்னவெனில், பந்து விளையாடும் பொழுது பந்துக்குப் பின்னால் அவன் இருந்தால் அயலிடத்தில் அவன் நிற்கவில்லை என்றும், பந்துக்கு முன்னால் இருந்தால் அயலிடத்தில் நிற்கிறான் என்பதாகவும் முடிவு கொள்ள வேண்டும்.

(ஆ) தனியுதை அல்லது ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, இந்த விதி பார்க்கப்படுகிறது என்பதையும் நினைவில்

கொள்ள வேண்டும்.

(இ) ஒறுநிலைப் பரப்பிற்கு உள்ளே அயலிடத்தில் நின்று கொண்டு, ஆட முயற்சிக்காமலும், தடையோ அல்லது இடையூறு செய்யாமலும் இருக்கிற ஒரு தாக்கும் குழு ஆட்டக்காரனை, ஒரு தடுக்கும் குழு ஆட்டக்காரன் வேண்டுமென்றே காலை இடறிவிட்டுக் குற்றம் செய்தால் அதற்குத் தண்டனையாக ஒறுநிலை உதையைக் கொடுக்க வேண்டும். -

5. தவறுக்கு உரிய தண்டனை

இந்த விதியைப் பற்றித் தெளிந்த அறிவு இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.தவறு வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா என்று அந்தச் சூழ்நிலையை நோக்கிக் கூர்ந்து, ஆராய்ந்து, உடனே முடிவெடுப்பதென்பது நடுவரின் திறமையைப் பொறுத்ததாகும். (உ.ம்) எதிராளியின்மேல் எகிறிக் குதித்தலை பந்துக்காக எகிறிக் குதிக்கவில்லை என்பதால் அது தவறாகக் கொள்ளப்படும். எதிராளியின் மேல் எகிறிக் குதிப்பதென்பது தற்செயலாக நிகழ்வது அல்லவே அல்ல என்பதை உணரவும்.

(ஆ) பந்து சென்று ஒருவர் கைமேல் விழுந்தால், அது தவறல்ல. ஆனால் கையால் பந்தைத் தொடுவதோ அல்லது தள்ளுவதோ கூடாது. தற்செயலாக அவன் கைமேல் பந்து பட்டவுடன் தவறென்று கூறி தண்டனை கொடுப்பது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, அவன் பந்தை வேண்டுமென்றே தொட்டானா

என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.

(இ) பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஒரு

ஆட்டக்காரர், தன் எதிராளியை மெதுவாக @lq5 (Fair charge)

முடியும். பந்தை விளையாடாத எல்லைக்குள்ளே இருந்து கொண்டு

தவறான நேரத்தில் (Wrong time) இடிக்க முயலக் கூடாது. இவ்வாறு