பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 41

செய்யப்படும் நிகழ்ச்சியை, நீங்கள் விதிக்கு மாறுபட்டது என்று கருதினால், அந்தத் தவறு ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே அல்லது உள்ளே எங்கு நிகழ்ந்தாலும் சரி, தவறுக்கு ஆளான குழுவுக்கு மறைமுகத் தனியுதை வாய்ப்பை அளிக்க வேண்டும்.

(ஈ) ஒரு இலக்குக் காவலன் எதிராளியைத் தடை செய்யும் பொழுது, அவன் இலக்குப் பரப்பினுள் இருந்தாலும் கூட, மெதுவாக இடிக்கப்படலாம். ஆனால் ஒன்று, வரப்போகிற பந்தின் மேல் அவன் குறிப்பாக இருக்கும்போது, தவறான முறையில் அவன் இடிக்கப்பட்டு அதனால் அவனைக் காத்துக் கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறானா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

(உ) தடுக்கும் குழுவினர் ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே செய்யும் கீழ்க்கண்ட 10 குற்றங்களுக்கு ஒறுநிலை உதையைத் தண்டனையாகக் கொடுக்க வேண்டும்.

1. எதிராளியை உதைத்தலும், உதைக்க முயலுதலும் 2. எதிராளியின் காலை இடறி விடுதல் 3. முரட்டுத்தனமான அல்லது ஊறுவிளைவிக்கக் கூடிய முறையில் தாக்குதல்.

4. எதிராளி மேல் எகிறிக் குதித்தல் 5. எதிராளி தடுக்காத நிலையில் அவன் பின்புறம் சென்று தாக்குதல்.

6. எதிராளியை அடித்தலும், அடிக்க முயலுதலும் 7. எதிராளியைக் கையால் கட்டிப் பிடித்தல் 8. எதிராளியை வேகமாகத் தள்ளுதல் 9. பந்தைக் கையால் தடுத்தாடுதல். 10. எதிராளி மீது உமிழ்நீர் துப்புதல். இந்தப் பத்துக் குற்றங்களில் ஏதாவது ஒன்றை ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே யார் செய்தாலும், அல்லது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே தாக்கும் குழுவினரில் ஒருவர் செய்தாலும் நேர்முகத் தனி உதையைத் தண்டனையாகக் கொடுக்க வேண்டும்.

(ஊ) நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி கேள்விகள் கேட்வும், உங்களின் முடிவை மாற்றிக் கொள்ளத் தூண்டியும் உம்மைச் சுற்றிக் கூடுகின்ற ஆட்டக்காரர்களின் செயலை எப்பொழுதும் அனுமதிக்கவே கூடாது.