பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-** டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 43

சொந்த இலக்கிற்குள் தானே பந்தை உதைத்துவிட்டால், அவருக்கு எதிராக நடுவர் முனை உதை வழங்க வேண்டும். ஒறுநிலைப் பரப்பிற்குள் இருந்து எடுக்கும் தனி உதையில் இருந்து அவ்வாறு செய்தாலும் மீண்டும் ஒருமுறை அங்கிருந்தே தனி உதை எடுக்கச் செய்ய வேண்டும்.

ஒரு ஆட்டக்காரர் மறைமுகத் தனி உதையால், எதிராளியின் இலக்கிற்குள் பந்தை எப்படியோ உதைத்துவிட்டால், கடைக் கோட்டுக்கு வெளியே பந்து சென்றதென எண்ணி, தடுக்கும் குழுவினருக்கு குறியுதை வாய்ப்பை வழங்க வேண்டும்.

(ஊ) தனியுதை எடுக்கப்படும் பொழுது, குறிப்பிட்டத் துரத்துக்கு அப்பால் செல்லாத ஆட்டக்காரர்களை, எட்டிப்போகுமாறு நடுவர் எச்சரிக்க வேண்டும். மீண்டும் அவர்கள் அதே தவறைச் செய்தால், அவர்களை ஆடுகளத்தை விட்டே வெளியேற்றி விட வேண்டும். தனி உதை எடுப்பதற்கான நேரத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் எதிராளியின் செய்கையைப் பண்பு கெட்டநடத்தை எனக் கொள்ள வேண்டும். (கவுன்சில் டிசம்பர், 1910).

7. நடுவரால் ஆட்டம் நிறுத்தப்படும் சூழ்நிலைகள்

(அ) தொடர்ந்து பிடிவாதமாக விதிகளை மீறிக்கொண்டு கருத்து வேறுபாடு காட்டுகின்ற ஆட்டக்காரரை எச்சரிக்கை செய்யும் பொழுதும்;

(ஆ) எச்சரிக்கைக்குப் பிறகு, முறை தவறி நடந்துகொண்டு தரக்குறைவான ஆபாச மொழிகளைக் கூறுகின்ற ஆட்டக்காரரை ஆடுகளத்தை விட்டே வெளியேற்றுகிற பொழுதும் ஆட்டம் நிறுத்தப்படும்.

(இ) உள்ளெறிதல் என்பது இரண்டு கைகளாலும் பந்தை எடுத்து மெதுவாகக் கீழே போடப்படுவதில்லை. பந்தைத் தூக்கித் தலைக்கு மேலாக எறியவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

(ஈ) பந்தை உள்ளெறியும் பொழுது, எறியும் ஆட்டக்காரரின் இருகால்களின் ஒரு பகுதியாவது தரையின் மேல் இருக்க வேண்டும். பந்தை எறியும் நேரத்தில், அவர் தன் குதிகால்களை உயர்த்தலாம். ஆனால் ஒவ்வொரு காலின் பகுதியும் தரையின் மேலேயே இருக்க வேண்டும். கால்களை பக்கக் கோட்டின் மேலேயோ அல்லது கோட்டுக்கு வெளியேயோ இருக்கலாம். ஆனால் ஆட்டக்காரர்கள் பலர் பந்தை எறியும் நேரத்தில், ஒரு காலையோ அல்லது இரு