பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையாட்டுக்களின் விதிகள்

குழுக்கள் அணிந்திருக்கும் சட்டைகளின் நிறத்தில், மாறுபட்டுள்ள நிறம் கொண்ட சட்டையை நடுவர் அணிந்திருக்க வேண்டும்.

(எ) நடுவரால் காண முடியாத சில நிகழ்ச்சிகளும் ஆட்டத்தில் நடக்கும். அப்பொழுது அவைகளைப் பற்றியக் குறிப்புக்களைப் பதிவுற்றக் கோடு காப்பாளர்களிடம் இருந்து (Neutral Linesmen) பெற்றுக் கொள்வது நடுவரின் கடமையாகும். (கவுன்சில் - மார்ச் 1929)

(ஏ) ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது குழுக்களின் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தங்கள் அணியினர்க்கு திறன் நுணுக்கங்களை பயிற்றுவிப்பாளருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து கொடுக்க வேண்டும்.

(ஐ) கூடியவரை இடையூறுகள் எதுவும் இல்லாமல் ஆட்டம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, விளையாட்டின் விதிகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணர்வின் அடிப்படையில்தான் நடுவரின் கடமைகள் பின்பற்றிச் செல்ல வேண்டும். தனியார் தவறுக்கு (Personal Foul) அல்லது வரம்பு மீறிய தவறுகளுக்குத்தான் தண்டனைகள் தரப்படவேண்டும். மிகச் சிறிய தவறுகளுக்கும், சந்தேகமுற்றதற்கெல்லாம் விசிலைப் பயன்படுத்தி, ஆட்டத்தின் விறுவிறுப்பைத் தடை செய்தால், அச்செயல் ஆட்டக்காரர்களிடையே ஒரு அமைதியின்மையையும் கெட்ட எண்ணத்தையும் கொடுப்பதாக அமையும்.

3. 51606&T BGsuffsr (Assistant Referee)

இருதுணை நடுவர்கள் நடுவருக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்படுவார்கள். (நடுவரின் முடிவின்படி) ஆடுகளத்திற்கு வெளியே பந்து சென்றதையும், எந்தக் குழு முனையுதை, குறியுதை, அல்லது உள்ளெறிதல் எடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுவது இவர்கள் பணியாகும். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடுவருடன் ஒத்துழைத்து, இவர்கள் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி நடத்திச் செல்ல வேண்டும். தேவையற்ற நேரத்தில் குறுக்கிட்டுத் தரக்குறைவான பண்புடன் நடக்கும் துணை நடுவரை நீக்கிவிட்டு, மாற்றாள் ஒருவரை நடுவர் நியமித்துக் கொள்ளலாம். (இந்தச் செய்தியை தேசிய அல்லது தலைமைக் கழகத்திற்கு நடுவர் அறிவிக்க வேண்டும்.) போட்டியை நடத்துகின்ற சங்கம் தரும் கொடிகளுடன், இவர்கள் செயல்படத் தயாராக இருக்க வேண்டும்.

பதிவு பெற்ற துணை நடுவர்கள் இருவரையும் சேர்த்து ஆட்டத்தில் மொத்தம் மூன்று நடுவர்கள் உண்டு. அவர்களில்