பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விளையாட்டுக்களின் விதிகள்

முடிவுக்குப் பிறகு, எந்தக் குழு உள்ளெறிய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதே அவர்கள் பணியாகும்.

(ஈ) கடைக்கோட்டுக்கு வெளியே பந்து முழுவதும் கடந்து சென்றுவிட்டால், கொடியை அசைத்துக் காட்டவேண்டும். நடுவரின் முடிவுக்குப் பிறகு, எந்தக் குழு தொடர வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதே அவர்கள் பணியாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளைத் தெரிந்து கொண்டது மின்றி, போட்டிக்கு முன்னால் மூவரும் கூடிக்கலந்து பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். தலைமை தாங்குகின்ற நடுவர், அவருக்கு அவர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும். குழப்பத்தைத் தடுக்கும் வகையில் அவரின் கட்டளைகள் அமைய வேண்டும். மறுபக்கத்தில் நடுவரின் தலைமையை துணை நடுவர்கள் விரும்பி ஏற்பதோடு, வினாக்களை எழுப்பாது ஏற்றுக் கொள்ளுந் தன்மையையும் உடையவர்களாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு அங்கு தலைகாட்டவே கூடாது. அவர்களின் உறவு உதவியாக இருக்க வேண்டுமேயன்றி தேவையற்ற இடையூறாகவும் எதிர்ப்பாகவும் அமையக் கூடாது.

கீழ்க்கண்ட முறைகளில், துணை நடுவர்களுடன் நடுவர் ஒத்துழைப்பார் - அறிவுறுத்துவார்.

(அ) கைமணிப் பொறியில் (Wrist Watch) நேரம் ஒத்துப் பார்த்தல்;

(ஆ) கோடு காப்பாளர்கள் இருவரும் ஆட்ட நேரத்தில் எந்தெந்தப் பகுதியை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதில்;

(இ) ஆட்டத் தொடக்கத்திற்கு முன், ஆட்டத்திற்குரியன வற்றைச் சோதனை செய்யும் அவரது கடமையில்;

(ஈ) தேவையானால், இருவரில் யார் தலைமைக் கோடு காப்பாளர் என்பதில்;

(உ) முனையுதை எடுக்கப்படும் பொழுது, எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில்;

(ஊ) கோடு காப்பாளரிடம் இருந்து வருகிற சைகையைக் கண்டாலும், அதை மீறித்தான் குறிகாட்டுவதில்:

(எ) உள்ளெறியும் ஆட்டக்காரரின் எந்தச் செயலைக் கோடு காப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்பதில் (அதாவது நடுவர்கள் பலர், கைகளால் இழைக்கப்படும் தவறுகளைத் தாங்கள் கண்காணித்துக் காலால் இழைக்கின்றத் தவறுகளை கோடு காப்பாளர்களை நோக்க விடுதல் போன்றவை.)