பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விளையாட்டுக்களின் விதிகள்

கூடைப்பந்தாட்டத்தின் நோக்கம்

ஒரு குழுவுக்கு 5 ஆட்டக்காரர்கள் இருக்க, இரு குழுக்களால் ஆட்டம் நடத்தப் பெறும். எதிராளிக்குரியதான வளையத்திற்குள் பந்தை எறியவும், அவ்வாறு பந்தை உள்ளே எறியாமல் அல்லது உள்ளே எறிந்து வெற்றி எண் பெறாமல் அவர்களை எதிர்க்குழுவினர் தடுப்பதே ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒருவர், பந்தை எறியலாம்; தட்டலாம்; வழங்கலாம்; உருட்டிவிடலாம் அல்லது எந்தத் திசைப் பக்கமேனும் தட்டிக் கொண்டு ஓடலாம். ஆனால் அந்தச் செயல் முறைகள் எல்லாம் கீழே கூறப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டே அமைய வேண்டும். விதிகள் அனைத்தும் இருபாலர்க்கும் உரியனவாகும்.

1. ஆடுகளத்தின் அமைப்பும் விளையாடப் பயன்படும் சாதனங்களும் 1. oGssrler estsjsir (Court Dimensions)

ஆடுவதற்குத் தடை செய்வனவாக அருகிலேயே எதுவு மில்லாமல் செப்பனிடப்படும் ஆடுகளம், சாதாரணமாக 28 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு நீண்ட சதுர வடிவமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த நீள அகலத்தின் எல்லைக் கோடுகள், அதன் உட்புறத்திலிருந்தே கணக்கிடப்பட வேண்டும்.

நீளத்தில் 2 மீட்டர் அதிகமாகவோ அல்லது குறைந்தோ அல்லது அகலத்தில் 1 மீட்டர் அதிகமாகவோ அல்லது குறைந்தோ ஓர் ஆடுகளம் பொதுவான ஆடுகளத்தின் அளவுகளில் இருந்து வேறுபடலாம். அவ்வாறு மாறுபடுகின்ற அளவுகள் ஒன்றுக்கொன்று ஒத்த அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

புல்லடர்ந்த ஆடுகளம் ஆடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. உள்ளாடும் அரங்கமாக இருந்தால், அந்த அரங்கத்தின் மேற்கூரையின் அளவு, குறைந்தது 7 மீட்டர் உயரமாவது இருக்க வேண்டும்.

அங்கு, ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தால், விளக்கின் ஒளியானது ஆடுகின்ற ஆடுகளம் முழுவதும் சீராகவும் முழுமையாகவும் படுவது போல, அமைந்திருக்க வேண்டும்.

வளையத்தை நோக்கிப் பந்து எறிபவருக்குக் கண் கூசும் படியாகவோ, பார்வையை மறைக்கும்படியாகவோ இல்லாமல் விளக்குகள் அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும்.