பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 59

தனி எறி பரப்பின் நெட்டுக்கோடுகளில் ஆட்டக்காரர்கள் நிற்க வேண்டிய இடத்தை, ஆடுகளப் படத்தில் காட்டியபடி குறிக்கவும், இதன் பயனைத் தனி எறிப்பகுதியில், முதல் பிரிவில் காண்க. 7. 5&f srs), Gm Glassir (Free Throw Lines)

தனி எறிப்பரப்பில் கூறியுள்ளபடி, தனி எறி கோடு ஒவ்வொரு வட்டத்திலும் குறிக்கப்படவேண்டும். அக்கோடு கடைக்கோட்டிற்கு இணையாக இருப்பதோடு அல்லாமல், கடைக் கோட்டின் உட்புற விளிம்பிலிருந்து தனி எறி கோட்டின் வெளி விளிம்புவரை 5.80 மீட்டர் தூரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய எல்லாக் கோடுகளும், காட்சிக்கு நன்றாகத் தெளிவாகப்படும்படி குறிக்கப்படுவதோடு, 2 அங்குல அகலம்

உள்ளதாகவும் அமைக்கப் பெற வேண்டும். குழுவினர் அமரும் பலகை (Team Bench)

ஒவ்வொரு குழுவின் பயிற்சியாளர் மற்றும் மாற்று ஆட்டக் காரர்கள் அமர்ந்திட, வெற்றி எண் குறிப்பாளர் அமர்ந்திருக்கும் மேசைக்கு இருபுறமும் அதாவது கடைக்கோட்டில் விரிவுப் பகுதியிலிருந்து 2 மீட்டர் தூரமும் பக்கவாட்டில் இருந்து 2 மீட்டர் தூரமும் நடுக்கோட்டில் இருந்து பக்கவாட்டில் இருபுறமும் 5 மீட்டர் தூரத்தில் இருப்பது போல அமைக்கப்படவேண்டும் (படம் பார்க்க) வெற்றி எண் குறிப்பாளர் அமரும் மேசையானது பக்கக் கோட்டிலிருந்து இணையாக 3 மீடடர் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். 8. SlearLGospasser (Back Boards)

ஒவ்வொரு பின்பலகையும் (Back Board) 3 சென்டி மீட்டர் கனமுள்ள திண்மையான மரத்தினால் அல்லது அதற்கேற்ற பொருத்தமான வெளிக்காட்டும் (Transparent) பொருட்களால், திருந்திய முறையில் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் அளவு பக்கவாட்டில் 1.05 மீட்டரும், நீளவாக்கில் 1.05 மீட்டராகவும் இருக்க வேண்டும். பலகையின் முன்பக்கம் தட்டையாகவும், தெளிவான தாகவும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அது வெள்ளை நிறமுள்ளதாக இருக்க வேண்டும். அந்தப் பரப்பளவு குறிக்கப்பட வேண்டிய முறை 2 அங்குல கனமுள்ள கோடுகளால் ஆக்கப்பட்ட நீண்ட சதுரம், பக்கவாட்டில் வெளி விளிம்பு உட்பட 59 சென்டி மீட்டரும், நீளவாக்கில் 45 சென்டி மீட்டர் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதனுடைய அடிக்கோட்டின் மேல் விளிம்பு வளையத்துடன் சமநிலையில் அமைந்திருக்குமாறு குறிக்கப்பட