பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விளையாட்டுக்களின் விதிகள் *E)

வேண்டும். பின் பலகையிலுள்ள ஓரங்கள் (Edges) எல்லாம் 12 அங்குல அகலமுள்ள கோடுகளாலேயே குறிக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட எல்லாக் கோடுகளும், வண்ணத்திற்குப் பின் தளத்திலமைந்த வண்ணத்திற்கு எதிர் மாறாகவே அமைந்திருக்க வேண்டும். பொதுவாக, பின்பலகை தெளிவானதாக இருந்தால், அது வெள்ளை நிறமுள்ளதாகக் குறிக்கப்பட வேண்டும். மற்ற நிலைகளில், அவை கருப்பு வண்ணமுடனேயே அமைந்திருக்க லாம். பின் பலகையின் ஓர விளிம்புகளும் அவைகளில் குறிக்கப் பட்டிருக்கும் நீண்ட சதுரங்கள் எல்லாம், ஒரே வண்ணக் கோட்டால்தான் குறிக்கப்பட வேண்டும்.

9. Lolrusososo (spflu QLib (Board Position)

பின் பலகைகள் இரு பக்கங்களிலும் கடைக்கோட்டிற்கு இணையாக, அதன் கீழ் விளிம்பு தரைக்கு மேலே 2.75 மீட்டர் உயரமுள்ளதாக, செங்கோணத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கடைக்கோடுகளின் மையப் புள்ளியிலிருந்து வளையங் களை ஏந்தியுள்ள பலகைகள், 1.20 மீட்டர் அளவு கொண்டு, ஆடுகளத்தின் உட்புறமாக நீட்டிக் கொண்டு இருக்க வேண்டும். பின் பலகைகளைத் தாங்கும் கம்பங்கள், கடைக்கோடுகளின் வெளி விளிம்பிலிருந்து ஆடுகளத்தின் வெளிப்புறத்தில், குறைந்தது 60 சென்டி மீட்டர் தூரத்தில் வைக்கப்பட வேண்டும். அவைகள், பின் தளத்திலமைந்திருக்கும் வண்ணத்திற்கு எதிர்மாறாக, ஒளிமிகுந்த வண்ணப் பூச்சுக் கொண்டதாக, அதனால் ஆட்டக்காரர்களுக்கு நன்றாகக் கம்பங்கள் புலனாகும்படிஅமைக்கப்பட்டிருக்கவேண்டும். 10. &n&oL_56ir (Baskets)

கூடைகள் (Baskets) என்பன, இரும்பு வளையமும் வெள்ளை கயிற்றாலான வலையுமாகும். இரும்பு வளையத்தின் விட்டம் 45 சென்டிமீட்டர் ஆகும். அது ஆரஞ்சுவண்ணத்தைக் கொண்டிருக்கும். வளையத்தின் கனம் 20 மில்லி மீட்டராக (0.8) இருக்க, அதனுடன் வலைகளை இணைப்பதற்காகச் சிறிய அளவுள்ளதுவாரம் (ஒட்டை) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். வளையத்தில் பந்து விழுந்தவுடன், சிறிது நேரம் அதைத் தாங்கி வெளியே விழுமாறு, வலைகளின் அமைப்பு இருக்க வேண்டும். வலையின் நீளம் 40 சென்டி மீட்டர் இருக்க வேண்டும்.

11. வளையங்களின் இடம் (Rings)

வளையம் பின்பலகையுடன் இருக்குமாறு பொருத்தப்பட வேண்டும். அதன் இடமானது தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரம்